தினமும் படித்து வர தடை நீங்கி பணவரவு வரும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

 

கடும் பண நெருக்கடியில் இருந்து மிள திருஞான சம்பந்தர் அருளியது இந்த பதிகத்தை தினமும் படித்து வர பண தடைகள் விலகும்

கோவில் திருபணி வீடு கட்ட நிலம் வாங்க போன்றவற்றிக்கு பணதடை உள்ள போது இந்த பதிகத்தை தினமும் படித்து வர தடை நீங்கி பணவரவு வரும்

மற்ற பண தேவைகளுக்கும் இது உதவும்

*1வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.
*2 இறைவர்ஆயினீர்! மறை கொள் மிழலையீர்! கறை கொள் காசினை முறைமை நல்குமே!
*3 செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்! பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!
*4 நீறு பூசினீர்! ஏறுஅது ஏறினீர்! கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!
*5 காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்! நாம மிழலையீர்! சேமம் நல்குமே!
*6 பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்! அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே!
*7 மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்! கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே!
*8 அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்! பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!
*9 அயனும் மாலும்ஆய் முயலும் முடியினீர்! இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!
*10 பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்; வெறி கொள் மிழலையீர்! பிரிவுஅது அரியதே.
*11 காழி மா நகர் வாழி சம்பந்தன் வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே.

அப்பன் ஈசன் மேல் நம்பிக்கை வைத்து முழு ஈடுபாடுடன் படித்து வர வேண்டும்

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »