செல்வவிருத்தி தரும் ஸ்ரீ ஸ்வர்ண கணபதி மந்திரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இம்மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வர வறுமை நீங்கி பொன்,பொருள் சேர்க்கையுடன் வளமான வாழ்வு கிடைக்கும்.இம்மந்திரம் ஜெபிக்க ஆரம்பிக்கும் பொழுது,

ஓம் ஸ்ரீ பார்கவ ரிஷியே நமஹ என்று 3 தடவை சொல்லி எனக்கு இந்த மந்திரம் பலிக்க ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் என்று பார்கவ ரிஷியை வேண்டிய பின் மந்திரம் ஜெபிக்கவும்.

ஸ்ரீ ஸ்வர்ண கணபதி மந்திரம்

ஓம் க்ஷ்ம்ர்யூம் | க்ஷிப்ர கணபதயே | ஸ்வர்ண கேஹே வ்யவஸ்திதாய |
ஸ்வர்ணப்ரதாய | க்லீம் வஷட் ஸ்வாஹா ||

அன்பர்களின் வசதிக்காக மந்திரம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது

OM KSHMRYOOM KASHIPRA GANAPATHAYE SWARNA GEHE WYAVASTHITHAAYA SWARNA PRATHAAYA KLEEM VASHAT SWAHA

சதுர்த்தி அன்று ஆரம்பிக்கவும்.(உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நாளாக இருக்க வேண்டும்.)

விநாயகர் படம் அல்லது விக்கிரகம் முன் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றவும்.
முதல் நாள் சுண்டல்,கொழுக்கட்டை,அவல்,பொரிகடலை, அச்சுவெல்லம், பழங்கள் வைத்து சிறப்பாக பூஜை செய்யவும்.அருகம்புல்லால் அர்ச்சிக்கவும்.

அடுத்து வரும் நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்யவும்.

சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் நைவேத்யம் சிறப்பாகப் படைத்து வழிபடவும்.

ருத்ராட்சம் அல்லது ஸ்படிக மாலையால் ஜெபிக்கவும்.

விரைவான பலன் பெற பிரயோகம்:

வெள்ளெருக்கு வடக்கு வேரில் செய்யப்பட்ட கணபதிக்கு ஆவாஹனாதி பூஜைகள் செய்து அவர் முன் அமர்ந்து இம்மந்திரம் ஜெபித்து வர சகல காரியத் தடைகள்,ஏவல்,பில்லி,சூனியம்,தீவினைகள் விலகி உயர்வான வாழ்வு அமையும்.

 

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »