கண்திருஷ்டி பகுதி 1


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வீட்டின் வாசற்படியில் கற்றாலையை கட்டி வைப்பதும் ஒரு சிறந்த கண்திருஷ்டி பரிகாரம். அதேப்போல் வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பூஜை போட்டு வைப்பதும் வருகின்ற நபர்களின் மனநிலையை சரிசெய்யும் இதுவும் கண்திருஷ்டி பரிகாரம். கருப்பு குதிரையின் லாடத்தை வாங்கி அதனை வீட்டின் வாசற்படியில் மாட்டிவைப்பதும் ஒரு சிறந்த கண்திருஷ்டி பரிகாரம். வீட்டிற்க்குள் எந்த தீயசக்தியும் நுழையவிடாமல் இந்த லாடம் தடுக்கிறது. குதிரையில் எந்த ஒரு புள்ளியும் இல்லாமல் இருக்கவேண்டும். பல பேர் இதில் ஏமாற்றிவிடுகிறார்கள். கருப்பு குதிரையின் லாடம் என்று வேறு குதிரையின் லாடத்தை கொடுத்துவிடுகிறார்கள். இதன் நம்பகதன்மையை பொருத்து வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள். கருப்பு குதிரையின் லாடம் கிடைப்பது கடினமாக இருக்கின்றது. கண்திருஷ்டி விநாயகர் என்றே ஒரு விநாயகர் இருக்கிறார். இவரின் படத்தை வாங்கி வடக்குதிசை நோக்கி வைத்து வழிபட்டால் கண்திருஷ்டி போகும் என்பார்கள். யோகநரசிம்மரின் படத்தை வைத்து வழிப்பட்டாலும் கண்திருஷ்டி போகும். வீட்டிற்க்குள் வாரத்திற்க்கு அல்லது மாதத்திற்க்கு ஒரு முறை கடல் தண்ணீரை கொண்டு வந்து தெளிக்கலாம். இதனால் வீட்டில் உள்ள துர்சக்திகள் வெளியில் போகும். கடல் நீர் இல்லாத ஊரில் பசுமாட்டின் கோமியத்தை வாங்கி தெளிக்கலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »