சந்தோஷ வாழ்வு தரும் ஸ்ரீசரபேஸ்வரர்!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

 


ஸ்ரீசரபேஸ்வரர் – சந்தோஷம் நிலைத்திருக்க வரம் அருளும், தெய்வ மூர்த்தம். ‘தீ, பூகம்பம், மண் மாரி, இடி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களும் பேராபத்துகளும் நீங்கவும், பரிகாரம் செய்ய முடியாத கஷ்டங்கள், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத பிணிகள் ஆகியன அகலவும், தீவினைகள், விஷ பயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் ஸ்ரீசரபரை வழிபட வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் வியாசர்.

பக்த பிரகலாதனைக் காக்க ஸ்ரீமந் நாராயணன் நரசிம்மமாய் அவதரித்து இரண்யகசிபுவை அழித்தருளிய திருக்கதை நாமறிந்ததே. அவ்வாறு அசுரனை அழித்தும் ஸ்ரீநரசிம்மரின் ஆக்ரோஷம் தணியவில்லையாம். இதனால் அஞ்சி நடுங்கிய தேவர்கள் சிவனாரைச் சரணடைந்தனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்டு, நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவபெருமான் எடுத்த திருக்கோலமே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தம் என்கின்றன புராணங்கள்.

தமிழகத்தில் கும்பகோணம் அருகிலுள்ள துக்காச்சி எனும் ஊரில் அமைந்திருக்கும் விக்ரமசோழீச்வரம் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில்தான் சரப சிற்பம் முதன்முதலாக அமைக்கப்பட்டது என்பர். இந்தத் தலம் தவிர தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் ஆலயம், , திரிபுவனம் ஸ்ரீகம்பகரேஸ்வரர் ஆலயம், திருவண்ணாமலை, மதுரை கோயில்கள், சென்னையில் குரோம்பேட்டை குமரன் குன்றம் கோயில், சோழிங்கநல்லூர் ஸ்ரீபிரத்யங்கிரா கோயில், திருமயிலை வெள்ளீஸ்வரர் கோயில், சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் ,கோயம்பேடு குசலவபுரீஸ்வரர் ஆலயம், திரிசூலம் ஆகிய தலங்களில் ஸ்ரீசரபேஸ்வரரைத் தரிசிக்கலாம்.

ஸ்ரீசரபேஸ்வரரை வழிபடுவதால் பகை அழியும், போர்களில் வெற்றி கிடைக்கும் நோய் நீங்கும் என்கிறது உத்தரகாரணாகமம் கூறுகிறது. ஸ்ரீசரபேஸ்வரர் அருள் வழங்கும் ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் அனுதினமும் அவரின் திருவடிவை மனதில் தியானித்து கீழ்க்காணும் ஸ்ரீசரபர் காயத்ரீ மந்திரத்தை சொல்லி வணங்குவோம்.

ஸாலுவேசாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப: ப்ரசோதயாத்

 

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »