வலம்புரிசங்கு பூஜை செய்யும் முறை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

48 நாள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலை உடற்சுத்தம் செய்துவிட்டு வலம் புரிச் சங்கை சுத்தமான நீரில் அலம்பி சந்தனம் குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றியபின் ஓம் கம் கணேசாய நம ஸ்ரீ குருதேவாய நம என்ற பின்

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே

பாவ மானாய த்மஹி

தந்நோ சங்க ப்ரசோதயாத்

என்னும் சங்கு காயத்ரியை 3 முறை சொன்ன பிறகு-ஸ்வாகதம்… ஸ்வாகதம் ஸ்ரீ லக்ஷ்மீ குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும், பிறகு ஓம் நவநிதி தேவதாயை நம சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரைப் போட வேண்டும், (வலம்புரிச் சங்கின் அளவைப் பொறுத்து தாமிரத் தட்டில் பச்சை அரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும். மூன்று முக நெய் தீபம் ஒன்று ஏற்றினால் போதும். பிறகு துளசி, அரளி, சிவப்பு மலர், மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும்.

ஓம் பத்ம நதியே நம

ஓம் சங்க நிதியே நம

ஓம் மகரநிதியே நம

ஓம் சுகச்சப நிதியே நம

ஓம் முகுந்த நிதியே நம

ஓம் குந்தாக்ய நிதியே நம

ஓம் நீல நிதியே நம

ஓம் மகநிதியே நம

ஓம் வரநிதியே நம

என்று நிதிகளை பூஜிக்க வேண்டும், மும்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

ஓம் யக்ஷசாய வித்மஹே

வைச்ரவ னாய த்மஹி

தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத்.

பிறகு 16 நாமாவளி அர்ச்சனை செய்து (மஞ்சள் குங்குமத்தால் செய்வது மிக விசேஷமானது)

ஓம் க்லீம் குபேராய நம

ஓம் க்லீம் ஸ்ரீமதே நம

ஓம் க்லீம் பூர்ணாய நம

ஓம் க்லீம் அஸ்வாரூடாய நம

ஓம் க்லீம் நரவாகனாய நம

ஓம் க்லீம் சதா புஷ்பக வாகநாய நம

ஓம் க்லீம் யக்ஷõய நம

ஓம் க்லீம் நித்யேஸ்வராய நம

ஓம் க்லீம் நித்யானந்தாய நம

ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாஸாய நம

ஓம் க்லீம் அகாஸ்ரயாய நம

ஓம் க்லீம் மகதைஸ்வர்ய ரூபாய நம

ஓம் க்லீம் சர்வக்ஞாய நம

ஓம் க்லீம் சிவபூஜகாய நம

ஓம் க்லீம் ராஜயோக வராய நம

அர்ச்சனை முடிந்த பிறகு குபேர காயத்ரி சொன்ன பிறகு தூப தீபம் காட்டி ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகித குபேராய நம: மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு.. என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும். கற்கண்டு, பால், அவல் பாயாசம் நிவேதித்து நெய் தீபத்தை கற்பூர ஆரத்திக்குப் பதிலாகக் காட்ட வேண்டும், நமஸ்காரம் செய்த பிறகு.

ஓம் வட திசை வல்லவா போற்றி

ஓம் நவநிதி தேவா போற்றி

ஓம் செல்வத்தின் உருவமே போற்றி

ஓம் செல்வ வளம் சேர்ப்பாய் போற்றி

ஓம் திருமகளின் நட்பே போற்றி

ஓம் ஐஸ்வர்ய கடாட்சமே போற்றி

ஓம் ஆனந்தத்தின் தனமே போற்றி

ஓம் குபேர நாயக போற்றி

என்று நமஸ்காரம் செய்து ஒரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தரவேண்டும்.

எளிமையான இந்த குபேர பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் செழிக்கும். 6 வெள்ளிகள் கடன் தீர வழி ஏற்படும். வியாழக்கிழமை மாலை 5 முதல் 7.30 மணி வரை குபேர காலத்தில் செய்து 9ம் வியாழன் யக்ஞத்துடன் முடிக்க பொருள் சேர வழி உண்டு. 8 பவுர்ணமிகள் குபேர அர்ச்சனையுடன் எளிதாய்ச் செய்து வர செல்வம் சேர வாய்ப்பு உருவாகும். எல்லோருக்கும் நவநிதி லக்ஷ்மி குபேர தரிசனம் கிடைக்கட்டும்.(நன்றி- தின மலர்).

வலம்புரிசங்கு எங்களிடம் கிடைக்கும்.

 

வலம்புரிசங்கு

1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.

2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.

3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். “சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்” என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.

8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.

10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது.

வலம்புரிசங்கு எங்களிடம் கிடைக்கும்.

 

 

 

 

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »