அளவற்ற பயன் தரும் நட்சத்திர தானங்கள்!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.


அளவற்ற பயன் தரும் நட்சத்திர தானங்கள்!

🌷 நட்சத்திரங்கள் மொத்தம் 27 உள்ளன. இந்த 27 நட்சத்திரத்திற்கும் தான வகைகள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர நாளிலும் செய்யவேண்டிய தானங்கள் குறித்தும், அதனால் கிட்டும் பயன்களைப் பற்றியும் பார்ப்போம்.

1. கிருத்திகை நட்சத்திர நாளில் நெய் பாயசத்துடன் அன்னதானம் செய்தால் தேவர்கள் வசிக்கும் உலகை அடைவர்.

2. ரோகிணி நட்சத்திர நாளில், பால், தயிர், நெய்யுடன் காய்கறிகள், பழங்கள் சேர்த்து தானம் செய்தால் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

3. மிருகசீரிட நட்சத்திர நாளில், கன்றுடன் கூடிய, பால் தரும் பசுவை தானம் செய்தால் சொர்க்க லோகம் கிடைக்கும்.

4. திருவாதிரை நட்சத்திர நாளில், வெல்லத்துடன் எள் கலந்து தானம் செய்தால், வாழ்வில் ஏற்படும் மிகப்பெரும் சங்கடங்கள், ஆபத்துகள் நீங்கும்.

5. புனர்புச நட்சத்திர நாளில் அன்னதானம் செய்தால், நல்ல குலத்தில் பிறக்கக்கூடிய வாய்ப்பு, என்றும் அழியாத புகழ், அன்னத்திற்கு குறைவு இல்லாதிருக்கும் நிலை, அழகு ஆகியவற்றைப் பெறுவர்.

6. புச நட்சத்திர நாளில் தங்க ஆபரணம் அல்லது தங்கக் கட்டியை தானம் செய்தால், எண்ணற்ற இன்பங்களைப் பெற்று வாழ்வர்.

7. ஆயில்ய நட்சத்திர நாளில், வெள்ளியால் ஆனப் பொருள் அல்லது வெள்ளி மற்றும் எருது போன்ற பொருட்களை தானம் செய்தால், அனைத்துப் பயங்களிலிருந்து விடுதலைப் பெறலாம். உயர்குலத்தில் பிறக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

8. மக நட்சத்திர நாளில், பெரியளவு புதிய பாத்திரத்தில் அதிகளவில் எள்ளை வைத்து தானம் செய்தால், பரலோகத்தில் பேரானந்தத்தை அனுபவிப்பர்.

9. புர நட்சத்திர நாளில் வேதியருக்கு சிறப்பு பட்சண வகைகளுடன் விருந்துணவு அளித்தால் சகல சௌபாக்கியத்தையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்.

10. உத்திர நட்சத்திர நாளில் நெய், பால், உயர்தர சம்பா அரிசி ஆகியவற்றை தானம் செய்தால் சொர்க்கம் லோகம் கிட்டும். இந்நாளில் செய்யப்படும் தானங்கள் பலமடங்கு உயர்ந்த பலனைத் தரும்.

11. ஹஸ்த நட்சத்திர நாளில், கொடி பதாகை, பாதச்சலங்கையுடன் கூடியுள்ளதும், நான்கு குதிரைகளுடன் கூடியதுமான முழுத்தேரை தானம் செய்தால், புண்ணியலோகத்தை அடையும் பாக்கியத்தைப் பெறுவர்.

12. சித்திரை நட்சத்திர நாளில் காளை மாடு, மாட்டு வண்டி, சந்தனகட்டை போன்ற பொருட்களை தானம் செய்தால் தேவலோகத்தில் இருக்கும் நடனப் பெண்களின் உபசரிப்பில் மகிழ்ந்து வாழும் பாக்கியத்தைப் பெறுவர்.

13. சுவாதி நட்சத்திர நாளில், தனக்கு மிகவும் விருப்பமான பொருளை தானம் செய்தால், அழியாப் புகழ் மற்றும் சொர்க்கலோக இன்பத்தைப் பெறுவர்.

14.விசாக நட்சத்திர நாளில், பால் தரும் பசு, தானியம், துணிகள், மாட்டு வண்டி, ஆகியவற்றை தானம் செய்தால், பித்ருக்கள் மகிழ்ந்து ஆசி வழங்குவர். துயரங்கள் நீங்கி சொர்க்க லோகத்தை அடைவர்.

15.அனுஷ நட்சத்திர நாளில் வஸ்திரதானம் செய்தால் சொர்க்கத்தில் நு}று ஆண்டுகள் வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.

16.கேட்டை நட்சத்திர நாளில், காய்கறி வகைகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை தானம் செய்தால், விருப்பம் நிறைவேறும். இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து நற்கதியை அடைவர்.

17.மூல நட்சத்திர நாளில், வேர்க்கிழங்கு வகை, பழவகைகளை தானம் செய்தால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவர். தாம் விரும்பும் நற்கதியை அடைவர்.

18.புராட நட்சத்திர நாளில் வேதியருக்கு தயிர் நிறைந்த பாத்திரத்தை தானம் செய்தால், குறைவில்லாத தனம், தானியம், பசு ஆகியவற்றைப் பெற்றும், பின்பு நற்குலத்தில் பிறக்கும் பாக்கியத்தையும் பெறுவர்.

19.உத்திராட நட்சத்திர நாளில், நீர்நிறைந்த குடம், சத்து மாவு, திண்பண்டங்கள், உயர்தர உணவு ஆகியவற்றை தானம் செய்தால், விரும்புவதை விரைவில் பெறுவர்.

20.திருவோண நட்சத்திர நாளில், வேஷ்டி துணியுடன் கம்பளம் சேர்த்து தானம் செய்தால், வெள்ளி விமானத்தில் சொர்க்கம் செல்லும் பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.

21.அவிட்ட நட்சத்திர நாளில், கன்றுடன் கூடிய பசு, வஸ்திரம், தங்க காசு ஆகியவற்றை தானம் செய்தால் மறுமையில் மோட்ச சாம்ராஜ்யத்தைப் பெறுவர்.

22.சதய நட்சத்திர நாளில், சந்தனத்துடன் நல்ல வாசனைப் பொருட்களை தானம் செய்தால் தேவலோக அப்சரஸ் பெண்களின் அன்பை பெறுவர்.

23.பு+ரட்டாதி நட்சத்திர நாளில் மொச்சை தானியம், பலகார வகைகள், பழவகைகள் தானம் செய்தால், சொர்க்க லோகத்தில் சுகபோக வாழ்வைப் பெறுவர்.

24.உத்திரட்டாதி நட்சத்திர நாளில் ஏழை, எளியோருக்கு மாமிசம் தானம் செய்தால் இறந்த பித்ருதேவதைகள் மகிழ்ந்து நல்லாசி வழங்குவர். மேலும் வாழ்வில் சுபயோகம் பெற்று, மேலுலகில் சுகபோகமாக வாழ்வர்.

25.ரேவதி நட்சத்திர நாளில், வெண்கலப்பாத்திரத்தில் அதிக பசும்பாலுடன் கரவைப் பசுவை சேர்த்து தானம் செய்தால், அப்பசுவானது அவருக்கு மேலுலகில் சகலவிதமான குறைவற்ற சுகத்தை அளித்திடும். மேலும் அவர் எங்கும் மகிழ்ந்திருப்பார்.

26.அஸ்வினி நட்சத்திர நாளில், குதிரையுடன் கூடிய தேரை தானம் செய்தால், தேர், யானை, குதிரை, பணியாளர்களுடன் கூடிய சகலசெல்வங்களைப் பெற்று வாழும் பாக்கியத்தைப் பெறுவர்.

27.பரணி நட்சத்திர நாளில், எள்ளால் செய்யப்படட உலோகப்பசுவை வேதியருக்கு தானம் செய்தால், இவ்வுலகில் அதிக பசுக்களையும், மேலுலகில் பெரும் புகழையும் அடைவர்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »