குழப்பமான மனநிலையில் இருந்து மீள பரிகாரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழப்பமான மனநிலையில் இருந்து மீள பரிகாரம் !!!

அவரவர் மனதிற்கு பிடித்த முறையில் பிரார்த்தனை மேற்கொள்ள முடியும்.

பொருளாதாரப் பின்னடைவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளால் முடிவெடுக்காத முடியாத மனநிலையில் மக்கள் இருக்கும் போது அதிலிருந்து மீளுவதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் அல்லது யாரை வணங்கலாம்? மேற்கூறப்பட்டுள்ளவை எல்லாம் சிம்மச் சனியால் ஏற்பட்டவை. சனியை ஜோதி கிரகம் என்றும் கூறலாம். அந்த வகையில் முனிவர்களை வழிபடுவது நல்லது. நவகிரகங்களில் சனி ஆர்ப்பாட்டம் இல்லாத குணமுடையது.

எனவே பல நூறு பேரை அழைத்து பூஜை, பஜனை நடத்தி வழிபடுவதை விட, முனிவர்கள் அல்லது மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று அமைதியாக சில நிமிடங்கள் சனியை நினைத்தது தியானம் செய்தால் பலன் பெறலாம். மக்களுக்கு தற்போதைய சூழலில் ஆடம்பரம் இல்லாத பக்திதான் தேவை.

அந்த வகையில் திருவண்ணாமலை திருத்தலத்தில் வழிபாடு செய்யலாம். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரரை வணங்குவதுடன், ரமணர் மகானையும் வழிபட முடியும். ஷேசாஸ்த்ரி சுவாமிகளும் அங்கு இருக்கிறார்கள். கிரிவலம் செல்ல முடியும். இதுபோல் அவரவர் மனதிற்கு பிடித்த முறையில் பிரார்த்தனை மேற்கொள்ள முடியும்.

பரிகாரம் : மலையடிவாரத்திலேயே இறைவனை நினைத்து அரை மணி நேரம் தியானித்து விட்டு வரலாம். இதன் மூலம் மனதளவில் சில தீர்வுகள் கிடைப்பதுடன், நிம்மதியும் பிறக்கும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »