செல்வ விருத்தி தரும் அதிர்ஷ்ட தேங்காய் பிரயோகம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.


ஏதேனும் ஒரு நல்ல நாளில் ஒரு மிகச்சிறிய அளவுள்ள தேங்காயை வாங்கி பூஜை அறையில் ஒரு இடத்தை பன்னீர் கொண்டு மெழுகித் துடைத்து அந்த இடத்தில் ஒரு வாழை இலை போட்டு அதில் தேங்காயை வைத்து சந்தனப் பொடி மற்றும் மல்லி,முல்லை அல்லது செந்தாமரை மலர் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்தபடியே அர்ச்சிக்கவும்.மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.அர்ச்சித்து முடித்த பின் அந்த தேங்காயை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து கடை அல்லது பூஜை அரை அல்லது வெட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும்.தினமும் சாமி படங்களுக்கு ஊதுவத்தி,கற்பூரம் காட்டும் பொழுது இதற்கும் காட்டிவரக் கடன்,வறுமை தீர்ந்து நிறைவான செல்வம் கிட்டும்.
மந்திரம்:
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத |
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹா ||
வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »