ஒளி வட்டத்தை சீராக்க பரிகாரம் | AURA CLEANSING |AURA CLEANING


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.


நம்மை சுற்றியிருக்கும் (AURA CLEANSING) ஒளி வட்டத்தை சீராக்க ஆப்பசோடா (BAKING SODA) பரிகாரம் !!
( ஆப்பசோடா நம்மிடம் கிடைக்காது மளிகை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதை முதலில் தெளிவு படுத்தி விடுகிறேன் !! )
நம் உணர்ச்சிகள், மனம் மற்றும் எண்ணங்களில் தெளிவின்மை, தவறான முடிவுகள் எடுத்தல், உடல் நலம், ஆன்மீக வளர்ச்சி போன்ற அனைத்திற்கும் நம்மை சுற்றியுள்ள ஒளி வட்டத்திற்கும் (AURA) தொடர்புண்டு. மேற்கூறிய எதுவும் சரியில்லை என்றால் அதுவே அந்த ஒளி வட்டத்தின் (AURA COLOUR) நிறமாக தெரியும். அதை சுத்தி செய்வது என்பதை பார்ப்போம். எப்படி காற்றுள்ள இடத்தில் நாம் நின்றாலோ அல்லது நாம் உள்ள இடத்தில் காற்று வந்தோலோ நம் புழுக்கம் மறையுமோ இதுவும் அப்படி தான் !! புற ஒளி வட்டத்தை (AURA) சீர் செய்து நம் எதிர் மறை எண்ணங்களை, நம்மை சுற்றியுள்ள எதிர் மறை சக்திகளை விரட்டுகிறோம் !! அவ்வளவே !! இதுவும் நாம் ஏற்கனவே கூறி பலரால் முயற்சிக்கப்பட்டு பலன் கொடுத்து வரும் ‘உப்பு நீர் பரிகார’ முறையை போன்றே மிகவும் சக்தி வாய்ந்தது !!! இதற்கு நாள்,கிழமை,நட்சத்திரம்,திதி,நேரம் காலம் எதுவுமில்லை !! எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் !! கிழக்கு முகமாக நின்று மிதமான சூட்டில் உள்ள குளியல் நீரில் சிறிது ஆப்பசோடா எனப்படும் Baking சோடா வை எடுத்து கலந்து உடல் முழுவதும் கைகளை சீப்பு போல் எண்ணி வாறுவது போல் தேக்க வேண்டும். மேலிருந்து கீழ்-பின்பு கீழிருந்து மேல்-3 முறை . அப்படி செய்யும் பொழுது கண்களை மூடி நம் உடலில் உள்ள தீய சக்திகள் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் விலக தியானித்து கொண்டே செய்ய வேண்டும். முடிந்ததும் அப்படியே 3 நிமிடங்கள் நின்று தியானத்தை முடித்து கொண்டு, பின்பு சகஜமான முறையில் எப்போதும் போல் குளித்து முடிக்கலாம். குளித்து முடித்ததுமே நல்ல மாற்றம் தெரியும். இதை செய்யும் நாளில் ஸோப் உபயோகிக்க கூடாது. வெறும் நீரில் மட்டும் நன்கு குளிக்கலாம். குளித்த அன்றைய தினமே நம் எண்ணங்களில் , நடத்தையில் மாற்றம் தெரியும்.இதை மாதம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும் !! வீட்டில் உள்ள அனைவரும் செய்யலாம். (10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாரடைப்பு வந்தவர்கள், இதய கோளாறு உள்ளவர்களை தவிர)
அடுத்த நாள் முதல் தினசரி “ஹிமாலயன் க்ரிஸ்டல் ராக் ஸால்ட்” உபயோகித்து குளித்து வரலாம். சிறிது தண்ணீரில் கலந்து முதலில் உடலெங்கும் தேய்த்து குளித்து விட்டு பின்பு ஸோப் தேய்த்து குளிக்கலாம். இதை தினமும் செய்யலாம். நல்ல மாற்றம் தெரியும். வாங்க இயலாதவர்கள் கல்உப்பு அல்லது இந்துப்பு உபயோகிக்கலாம் !! 70% மாற்றம் தெரியும் !!

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »