சம்பளம் வாங்கியவுடன் கரைந்து விடாமல் இருக்க பரிகாரம்!!!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.சம்பளம் சிலருக்கு வாங்கியது போல்தான் இருக்கும். வீட்டிற்க்கு செல்வதற்கு முன் ஏதாவது ஒரு வகையில் பணம் பாதி செலவழிந்து விடும். கையில் இருக்கும் பணமும் ஓரிரு நாட்களில் வேகமாக கரைந்து விடும், முதலில் சம்பளம் வாங்கியவுடன் மங்களம் தரும் பொருட்கள் ஏதாவது வாங்க வேண்டும். 

அப்போதுதான் செல்வம் கையில் தங்கும். ஏதாவது இனிப்பு, பால், மல்லிகைப்பூ, இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கினால் செல்வம் பெருகும். சம்பளமும் சிறிது சிறிதாக கரையும். மேலும் சேமிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி நம் பணம் நம்முடனே தங்குவதற்க்கு வழி பிறக்கும். சம்பளம் வாங்கியவுடன் அநாகரீகமான காரியத்திற்க்கு அப்பணத்தை செலவழித்தால் பணம் சீக்கிரம் கையை விட்டுப்போய்விடும்.

பணம் வாங்கியவுடன் முதன் முதலில் அசைவ உணவு சாப்பிடுவது நண்பர்களுக்கு அசைவ விருந்து வைப்பது, மது குடிப்பது, போன்றவைகளால் பணம் சீக்கிரம் கையை விட்டு போய்விடும். சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக வண்டிக்கு பெட்ரோல் போடக்கூடாது.

பெட்ரோல் போட நினைப்பவர்கள் உங்கள் பணத்தில் ஏதாவது இனிப்பு வாங்கி சாப்பிட்டோ அல்லது பால் வாங்கி சாப்பிட்டோ அதற்கு பின் பெட்ரோல் போடும்போது உங்கள் பணம் கையில் நிற்க்கும். இல்லையென்றால் மாதம் முடிவதற்குள் சேமிக்க வழி இல்லாமல் அனைத்தும் கரைந்து விடும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »