அஷ்ட கணபதி மந்திர தீட்சை !!!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சித்தர்கள் மணி,மந்திரம்,ஔஷதம் என்ற மூன்று கலைகளிலும் வல்லவர்கள்.அவர்களின் கூற்றுப்படி, அவர்களின் துறையில் வெற்றி கிட்ட விநாயகர் மந்திரம் ,அன்னை ஸ்ரீ வாலைபரமேஸ்வரி மந்திரம், பஞ்சாட்சர மந்திரம் இவற்றில் சித்தியடைதல் அவசியம்.

முதலில் கணபதி மந்திர சித்தி பற்றிப் பார்க்கலாம்.அகஸ்தியர் தனது வாத சௌமியம் 1200 என்ற சுவடியில் கூறியுள்ளவை.

அஷ்ட கர்மங்களுக்கும் ஒவ்வொரு விதமான கணபதி வழிபாடும் அதன் சித்தி முறைகளையும் வரிசையாகக் கூறிப் பின் இறுதியாக அஷ்ட கணபதிகளும் ஒருங்கே நின்று சிறப்பான முறையில் அருள் செய்யும் அஷ்ட கணபதி மந்திரம் பற்றி கூறுகிறார்.

அஷ்ட கணபதி மந்திரம்:

ஓம் கிலி அங் உங்

இம்மந்திரத்தை அமாவாசை அன்று அல்லது உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து ஜெபிக்கத் துவங்கவும்.

சித்தர்கள் வழியில் பயணிக்க விரும்பும் யாவரும் அசைவ உணவை அறவே தவிர்த்தல் வேண்டும்.

கிழக்கு முகமாய் அமர்ந்து ஜெபிக்கவும்.வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்து ஜெபிக்கவும்.

ஸ்படிகம்,அல்லது ருத்ராக்ஷம் மாலை ஜெபத்திற்கு பயன்படுத்தலாம்.

இம்மந்திரத்தை லக்ஷம் உரு ஜெபித்தால் சித்தியாகி விடும்.ஜெபம் செய்து வரும் காலத்தில் கனவில் யானைகள் வந்து உங்களித் துரத்துவது போல் அல்லது உங்களுடன் விளையாடுவது போல் தோன்றலாம்.உங்கள் அருகில் உறங்குபவர்களுக்கு இவையான அனுபவம் ஏற்படலாம். இது மந்திரம் சித்தியாகி வருகிறது என்பதைக் குறிக்கும்.நபருக்கு நபர் அனுபவம் மாறலாம்.

லக்ஷம் உரு ஜெபம் செய்து முடித்த பின் தனக்கோ பிறருக்கோ இம்மந்திர சக்தியால் அதிக நன்மையான பல காரியங்களை செய்யலாம்.

இடது உள்ளங்கையில் விபூதி பரப்பி அதில் வலது கை மோதிர விரலால் உ என்ற பிள்ளையார் சுழி போட்டு ஓம் கிலி அங் உங் என்று 108 உரு ஜெபித்து விபூதி பூச சுரம்,ஜனனி,குன்மம்,காசம்,வஞ்சனை,ஏவல்,விஷம்,தோஷம், கரப்பான்,கர்ப்பரோகம்,வயிற்றுவலி மற்றும் சர்வ பீடைகளும் தீரும்.

கணபதி மந்திர சித்தி பெறாமல் வேறு எந்த தெய்வத்தின் மந்திர சித்தி பெற்றிருந்தாலும் அது சித்துக்களையும் சக்திகளையும் தந்து அகந்தை அதிகரிக்கச் செய்து ஒழுக்கம் கெட வைத்துப் படுகுழியில் தள்ளிவிடும்.

வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »