மகிழ்ச்சி


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

* மகிழ்ச்சி *

—————–
அழகான பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்
அவரிடம் “என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன்.
அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்.”
கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.
அவர் அந்த பணக்கார பெண்ணிடம், ” நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி *மகிழ்ச்சியை* வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் ” என்றார்.
பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
” என் கணவர்மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல. யாரிடமும் சிரிக்க முடியவில்லை
என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது
ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று *மழை* பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன்.
மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன்.
அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக *வருடிக்* கொடுத்தது. கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்*..!!!
நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை *சந்தோஷிக்கிறது* எனில்,
ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன்.
அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை *மகிழ* வைத்து நான் *மகிழ்ந்தேன்*.
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் மகிழ நானும் பெரு *மகிழ்வுற்றேன்*.
இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
*மகிழ்ச்சி* என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்.”
இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.
ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம் *மகிழ்ச்சி,* அது அவளிடம்இல்லை.
வாழ்க்கையின் அழகு
என்பது நீங்கள்
எவ்வளவு *மகிழ்ச்சியாக* இருக்கிறீா்கள்
என்பதில் இல்லை…
உங்களால் அடுத்தவர்
எவ்வளவு *மகிழ்ச்சி* ஆகிறார்கள்
என்பதிலேயே இருக்கிறது…
*மகிழ்ச்சி* என்பது போய் சேரும் இடம் அல்ல
. அது
அற்புத ஒரு பயணம்…
*மகிழ்ச்சி* என்பது எதிர்காலம் இல்லை அது நிகழ்காலம்…
*மகிழ்ச்சி* என்பது ஏற்றுக்கொள்வது அல்ல
அது ஒரு முடிவு…
நீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள் என்பதில் இல்லை *மகிழ்ச்சி*
நீங்கள் யார் என்பதில் தான் *மகிழ்ச்சி* !!!
” *மகிழ* வைத்து *மகிழுங்கள்* உலகமும் இறையும் உங்களை கண்டு *மகிழும்*..!!!

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »