கடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

விரைவில் கடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும்

எந்த ஒரு பொருளுக்கும் இந்த உலகத்தில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை பெரும்பாலும் பணமாக தான் இருக்கிறது. ஒரு மனிதன் மிகப்பெரும் செல்வந்தனாக இருக்க பொருளீட்டி கொண்டிருந்தால் மட்டும் போதாது, வீண் செலவுகள் ஏதும் ஏற்படாமல் ஒருவரிடம் செல்வம் சேர வேண்டும். நமது இல்லத்தில் பொருளாதார நிலை உயர நாம் செய்ய வேண்டிய சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

பணத்தை கடனாக வாங்குவதையும் பிறருக்கு கடனாக வழங்குவதையும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்யகூடாது. ஆனால் வாங்கிய கடன்களை திரும்ப அடைப்பதற்கு பொர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை செவ்வாய் கிழமைகளில் “ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை” வணங்கி கடன் தொகைகளை அடைக்க தொடங்கினால் முழுவதுமாக கடன் அடைக்க முடியும். வருங்காலத்தில் கடன்கள் வாங்கும் நிலையும் ஏற்படாது.
online Pooja Store
வெற்றிலை என்பது லட்சுமி அம்சம் நிறைந்த ஒரு இலை ஆகும். அதனால் தான் நமது மத சடங்குகளிலும், தெய்வங்களை வழிபடும் பூஜைகளின் போதும் இந்த வெற்றிலைகளை அதிகம் பயன்படுத்துகிறோம். வெற்றிலைகளை பூஜைகளில் பயன்படுத்திய பிறகு அதை அதே இடத்தில் வாடி வதங்க விடாமல் அப்புறப்படுத்தி விட வேண்டும்.

வீட்டில் பூஜையறையிலோ அல்லது கோவிலுக்கு சென்று ஆண்டவனை வணங்கும் போதோ அதிகம் கிழிந்த, அதிகம் ஒட்டு போட்டு தைத்த ஆடைகளை அணிந்து கொண்டு சென்று வழிபடுவதை தவிர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அழுக்கான, துவைக்காத துணிகளை அணிந்து இறைவழிபாடு மற்றும் பூஜைகளை மேற்கொள்ள கூடாது. மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை தவிர பிறர் பயன்படுத்தும் ஆடைகள் செருப்பு மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இப்படி செய்வதால் அவர்களின் பொருட்களில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகள் உங்கள் சக்தி உடல்களில் புகுந்து உங்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே இதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றி, சாம்பிராணி மற்றும் தூபங்கள் போட்டு லட்சுமி மற்றும் குபேரனை வணங்க வேண்டும். ஒரு மனிதனின் தலைமுடியில் ஒரு வகையான ஆன்மீக சக்தி இருக்கிறது நமது மதத்தில் ஒவ்வொருவரின் தலைமுடியில் லட்சுமி வாசம் செய்வதாக கருதப்படுகிறது. எனவே ஆண்கள் அனைவரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முகச்சவரம் மற்றும் தலைமுடி நறுக்குதல் கூடாது. முகச்சவரம் மற்றும் முடி நறுக்க நினைக்கும் ஆண்கள் புதன் கிழமை காலை 8 மணிக்கு முன்பாக இவற்றை செய்து கொள்வது சிறந்தது. பெண்கள் இந்த இரு கிழமைகளில் தலைக்கு ஊற்றி குளியல் செய்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் செல்வ சேர்க்கையையும் தரும்.

வீட்டினுள் இருக்கும் போதும் வெளியில் இருக்கும் போதும் பிறரை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதை தவிர்க்க வேண்டும். இது செல்வ சேகரத்தை ஒருவருக்கு ஏற்படவிடாமல் செய்துவிடும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »