






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
எல்லா கடவுளையும் நாம் ஒரே மாதிரியாக வழிபடுவதில்லை. ஒவ்வொரு கடவுளுக்கு வழிபடுவதற்கான பிரத்யேக முறைகள் சில உண்டு. அதுபோல் சிவனை வழிபடுவதற்கும் நிறைய கட்டப்பாடுகள் உண்டு. அதைத் தெரிநது கொண்டு அதன்படி வழிபடுங்கள்.
சிவபெருமானை வழிபடும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது?
இந்து மதப் பாரம்பரியத்தின் படி, முறையான சடங்குகளுடன் சீரான வழிபாடு இல்லாத இடத்தில் சிவனை வைத்து வழிபடக்கூடாது. அது சிவனைக் கோபமடையச் செய்யுமாம்.
கண்ட இடங்களில் சிவலிங்கத்தை வைக்கக்கூடாது. அது அவருடைய கோபத்துக்கு
வில்வ இலை, வில்வ பழம், குளிர்ந்த பால், சந்தனம் ஆகிய குளிர்ச்சியான பொருள்களை வைத்து வழிபடுவது சிவனுக்கு மிகவும் பிடிக்கும்.
தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடக்கூடாது.
துளசியை சிவனுக்குப் படைத்து வழிபடக்கூடாது.
தேங்காய்த் தண்ணீரை சிவனுக்குப் படைக்கக் கூடாது.
மஞ்சள் புனிதமானது தான். ஆனால் மஞ்சளை சிவனுக்கு வைத்து வழிபடக்கூடாது.
அதேபோல் குங்குமத்தையும் சிவனுக்கு வைத்து வழிபடக்கூடாது.
நந்தியாவட்டை மலர்களை சிவனுக்குப் போடுதல் கூடாது.
வெந்நிற மலர்கள் தான் சிவனுக்கு விருப்பமானவை. அதனால் வெண்ணிற மலர்களை வைத்து வழிபடுங்கள்.
அரளியையும் வெள்ளைநிற அரளியை மாலையாக அணிவது இன்னும் சிறப்பு.
சிவனுக்காக படைத்த உணவுகளை திரும்ப எடுத்து யாரும் உண்ணக்கூடாது.
இதுபோன்ற விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு சிவபெருமானை வணங்குங்கள்.