தத்தகிரி முருகன் கோவில் – ஸ்வயம்பிரகாச சுவாமிகள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

 

தத்தகிரி முருகன் கோவில் வரலாறு

தெய்வ பக்தி தேசமெங்கும் பரவி, ஆன்மிக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு மகான்கள் துணை நின்றார்கள். வேதத்தின் சாராம்சத்தையும் சாஸ்திரத்தின் கருத்துகளையும் மக்கள் மத்தியில் இவர்கள் எடுத்து வைத்தார்கள். இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆதிசங்கரரில் இருந்து இது ஆரம்பம். அவரது பாதையை அடியொற்றி எத்தனையோ மகான்கள், மகரிஷிகள், துறவிகள் இந்த பூமியில் அவதரித்துள்ளார்கள். எந்த நோக்கத்துக்காக அவர்களுடைய அவதாரம் நிகழ்ந்துள்ளது என்பதையும் இறைவன் இந்த மகான்களுக்கும் ஒரு கட்டத்தில் எடுத்துரைத்தான். இப்படி, இந்த பூமியில் அவதரித்த மகான்களுள் ஒருவரே ஶ்ரீஸ்வயம்பிரகாச அவதூத ஸ்வாமிகள்.

அவதூதர்கள்

அவதூதர்களில் சிலர் உடலில் ஒரு பொட்டுத் துணிகூட இல்லாமல். திகம்பரராகத் (நிர்வணமாக) திரிவர். இதை அருவருப்பாக எண்ணக்கூடாது. இது பக்தியின் ஓர் நிலை. அவதூத பரம்பரையின் ஆதி குரு ஶ்ரீதத்தாத்ரேய பகவான்.

தத்தகிரி அமைந்துள்ள இடம்

விஸ்வரூப ஆஞ்சநேய மூர்த்தியும், நாமகிரித் தாயார் மற்றும் நரசிம்ம மூர்த்தி அருள் பாலிக்கும் நாமகிரி தலம் அமைந்துள்ள இடம் நாமக்கல். இந்த நகருக்கு அருகில் உள்ள சேந்தமங்கலத்தில் தத்த…

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »