ம்ருத்யுஞ்ஜய ஹோமம் ஏன்?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ம்ருத்யு என்றால் மரணம் என்று பொருள்.

ஜெயம் என்றால் வெற்றி.

ம்ருத்யுஞ்ஜெய மந்திரம் என்றால் மரணத்தை வெற்றி கொள்ளும் மந்திரம் என்று பொருள்.

ம்ருத்யுஞ்ஜயர் என்றால் மரணத்தை வெல்பவர் என்று பொருள்.

ஒருவருக்கு ஜாதக ரீதியாக கண்டங்கள் / விபத்துக்கள் / கொடிய நோய்…..போன்றவை ஏற்படும் போது அந்த பாதிப்புகளால் ஒருவருக்கு மரணம் ஏற்படாமல் இருக்க வழிபடும் கடவுள் ம்ருத்யுஞ்சயர்.
செய்யப்படும் ஹோமம் ம்ருத்யுஞ்ஜய ஹோமம்.

இது ஒரு நோய் தாக்கியவர் அந்த நோயிலிருந்து விடுபட சிகிச்சை எடுத்துக் கொள்வது போல நமது உயிருக்கு பங்கம் ஏற்படும் காலங்களில் செய்யப்படும் ஒரு பரிகாரம்(ப்ராயஸ் சித்தம்)
இந்த ம்ருத்யுவானது
துர் ம்ருத்யு,
கால ம்ருத்யு,
அகால ம்ருத்யு… என்று பிரிக்கப்படுகிறது. இதை பற்றி வேறு ஒரு சமயம் விரிவாக காண்போம். அடுத்து…

ஆயுஷ் ஹோமம்
*******************

ஆயுள் என்றால் இந்த உயிரானது இந்த உடலில் இருக்கும் காலம். அதாவது நாம் இந்த உலகில் வாழும் காலம்.

இந்த “ஆயுஸ் ” என்ற உயிரை ஒரு தேவதையாக (தெய்வமாக) வேதம் சொல்கிறது.
இந்த ஆயுள் தேவதையை நாம் வழிபட்டு வந்தால் நமது ஆயுளானது நீடித்து நிலைத்து இருக்கும் என்பது வேதம் சொல்லும் செய்தி.
எனவே தான் ஒரு குழந்தை பிறந்து ஒரு வயது முடிந்தவுடன் ” அப்த பூர்த்தி ” என்ற ஆண்டு நிறைவின் போது குழந்தைக்கு “ஆயுஷ் ஹோமம்” செய்து அந்த குழந்தையின் ஆயுளானது நீண்ட காலம் இருக்க வேண்டி ஒவ்வொறு வயது முடியும் போதும் ஆயுஷ் ஹோமம் செய்ய வேண்டும் என வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அது ஏன்??????

சிறுநீர் கழித்தவர்கள் உடனே தண்ணீர் குடிப்பார்கள். அதாவது உடலிலிருந்து வெளியேறிய நீர் சக்தியை மீண்டும் உடலுக்கு ஈடுகட்ட எப்படி தண்ணீர் குடிக்கிறோமோ அது போல

நமக்கு ஒரு வயது முடிந்து விட்டால் நாம் இந்த உலகில் வாழும் காலத்தில் ஒரு வருடம் குறைந்து விட்டது என்று தானே பொருள். அப்படி இழந்த ஒரு வருடத்தை மீண்டும் இந்த உடலுக்கு மீட்டுத்தர அந்த ஆயுள் தேவதையை வேண்டி ஒவ்வொரு வயது முடியும் போதும் “ஆயுஷ் ஹோமம்” செய்ய வேண்டும் என நமது நலனை உத்தேசித்து வேதத்தை வகுத்த ரிஷிகள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள் என்றால் அது மிகை அல்ல.

எனவே ஆயுஷ் ஹோமம் என்பது நமது ஆயுளை நீட்டிக்க வேண்டி வருடா வருடம் செய்யப்படும் ஹோமம். அதாவது பெயர் வைத்தல், திருமணம் செய்தல்…. போன்று வேதத்தில் சொல்லப்பட்ட நம் கடமைகளில் ஒன்று.

ம்ருத்யுஞ்ஜய ஹோமம் என்பது திடீர் என நமக்கு நமது உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரும் சமயத்தில் நமது உயிரை காத்துக் கொள்ள செய்யப்படும் ஹோமம் ம்ருத்யுஞ்ஜய ஹோமம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »