ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் முறை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று காலை தலைக்கு குளித்து, சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து நல்ல ஆடை உடுத்தி வீட்டில் அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும். கலசம் வைக்க வேண்டிய தேவை இல்லை. படத்துக்கு பூஜை செய்தாலே போதுமானது. தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் அம்மன் படத்தை வைத்து மலர்களால் பூஜை செய்ய வேண்டும்.
மந்திரம் தெரிந்தவர்கள் அதை ஜெபித்து பூஜை செய்யலாம். தெரியாதவர்கள் அதை இணய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து ஒலிக்கச் செய்யலாம். அம்மனுக்கு வெற்றிலை, பாக்கு பழத்துடன் இனிப்பு செய்து படைக்கலாம். அல்லது ஒரு பாயசமாவது செய்து படைக்கலாம். #கடை_இனிப்புகளை #கடவுளுக்கு_படைப்பது_தவறு.

அதன் பிறகு கற்பூர தீபாராதனையுடன் பூஜையை முடித்து அருகில் உள்ள பெண்களுக்கு பூ, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு அளிக்க வேண்டும். பலர் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்வ்து வழக்கமாகும்.
இந்த ஆடி வெள்ளி வழிபாடு பெண்களுக்கே உரியதாகும். இதன் மூலம் சுமங்கலிப் பெண்களின் கணவர்களுக்கு ஆயுள் கூடும். திருமணமாகாத பெண்களுக்கு மணம் ஆகும். குழந்தை இல்லாதோருக்கு மக்கட்பேறு கிட்டும். அனைவருக்கும் வீட்டில் செல்வம் தழைத்து நல்வாழ்வு பெறுவார்கள்.

#ஆடிவெள்ளிக்கிழமை

#விரதம்இருக்கும்முறை

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »