Sai Baba


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உன்னைச் சுற்றி தாங்க முடியாத கஷ்டம் இருக்கிறதோ; அப்போது சந்தோஷமும் நிச்சயம் உன் அருகில் தான் உள்ளது.

முதலில் நீ கஷ்டத்திலிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைக்காதே. கஷ்டத்தை தைரியமாக எதிர்கொள்ள கற்றுக் கொள்.

நீ சராசரியாக சுயநலமாக சிந்திக்கும் வரை உன் மனதை எதுவுமே திருப்தி படுத்தாது. வாழ்க்கையில் உனக்கு எதுவுமே சந்தோசமாகவும் தெரியாது.

உன் சந்தோஷத்திற்கு ஆசை ஒரு நிபந்தனை போடுகிறது. அதாவது முதலில் ” இந்த கார் கிடைத்தால் நான் சந்தோஷமாக இருப்பேன். இந்த பெண், இந்த வீடு, இந்த வேலை, இந்த கடன் தீர்ந்தால், உடல்நிலை சீரானால் என்று நீண்டு கொண்டே போகிறது ”

நீ விரும்பியதை பல போராட்டங்களுக்கு பிறகு நீ அடைந்த சந்தோஷத்தை அனுபவிக்காமல் அடுத்த ஆசையை நினைத்து வருந்துகிறாய்.

சந்தோஷம் என்பது இயற்கையானது. அதை அப்படியே உணர்ந்துகொள்.

எந்தக் காரணமும் இன்றி சந்தோஷமாக இரு. சந்தோஷமாக இருக்க காரணங்களைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

உன் மனதில் சேர்ந்திருக்கும் குப்பைகளை வெளியே தூக்கி எறி. அப்போதுதான் நீ நிலையான சந்தோஷத்தை உணர முடியும்.

கவலை கொள்ளாதே இந்நிலை கூடிய விரைவில் மாறும்.

நான் இருக்கிறேன் நிழலாக என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம்…

உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன்.

என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு வாழ்க்கையில் நீ உயர்ந்த நிலையை அடைவாய்.

உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன்.

நல்லதே நடக்கும்..!

என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் பெற்ற என் பிள்ளை நீ !…..

See Translation

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »