கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பொதுவான சில பரிகாரங்கள்

குலதெய்வம் கோயிலுக்கு எடைக்கு எடை பச்சை அரிசி தானம் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

சனி பகவானுக்கு வாரம்தோறும் எள் தீபம் ஏற்றி வந்தால், சிறுகச் சிறுக கடன் தொல்லை குறையும்.

உங்கள் ஊரில் உள்ள எல்லைச்சாமிக்கு பட்டாடை சாத்தி பொங்கல் வைத்துப் படைய லிட்டால், கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

காலையில் 6 மணிக்குள் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி, சுவாமியை வழிபடுங்கள். அதேபோல் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக விளக்கேற்றி வழிபடலாம்.

இப்படிச் செய்வதுடன், காலை சூரிய உதயத்தின் போதோ, மாலை சூரிய அஸ்தமனத்தின்போதோ தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. தண்ணீரை வீணாக்கக்கூடாது. காரணம் தண்ணீருக்கு அதிபதியான வருணன், குபேரனைப் போலவே செல்வத்துக்கும் அதிபதி என்பதால், தண்ணீரை வீணாக்கக்கூடாது. தானியங்களையும் வீணாக்கக்கூடாது.

கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

1. அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும்.

2. செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்சனை நீங்கும்.

3. ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

4. அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒருசிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும்.

5. குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம்.

6. கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம்.

7. மரணயோகம் உள்ள நாட்களிள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

8. தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

About the author

Related

பொதுவாகவே சனிப் பிரதோஷம் என்றால் அதற்கு. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »