சூரியனை ஏன் வணங்க வேண்டும்?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள். எப்பொழுது வேண்டுமானாலும் செத்துப்போகக் கூடியவர்கள். நோய் நொடியில் விழக்கூடியவர்கள். தவறு செய்ய கூடியவர்கள். மிகப் பெரிய அபத்தங்களுக்கு ஆளாகக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் எதிரே வரும்போது முகமன் சொல்கிறீர்களே.. வாழ்க, வணக்கம் என்று சொல்கிறீர்களே.. ஏன்? எதனால்? அவரிடம் இருந்து ஏதேனும் ஒரு நல்ல விஷயம், நல்ல உதவி உங்களுக்கு வந்து சேரும். வந்திருக்கும்; வரலாம் என்ற எண்ணத்தால் அப்படி செய்கிறீர்கள். சூரியனால் இடையறாது இடையறாது பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. அவற்றின் தாக்கம் இங்கே இருக்கிறது. அப்படித் தாக்கம் இருக்கின்ற, தொடர்பு இருக்கின்ற, நல்லது செய்கின்ற கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் வழிபடுவதில் என்ன தவறு? எல்லா சக்தியும் வழிபடக்கூடியவை. சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்கிறார். கடவுளின் பேச்சாக, கடவுளின் குணமாக, கடவுளின் உருவமாக, கடவுளின் பிரத்யட்ச வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன. எல்லாம் வல்ல கடவுளை உங்களால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுவதில் தவறே கிடையாது.

ஓம் ஸ்ரீ சூரிய பகவானே நமஹ 🙏

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »