தானாக குளம் எப்படி நிரம்பும், மழை எப்படி வரும் …!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அத்தி வரதர் வைபவம் நடப்பதற்கு சில நாட்கள் முன், திருக்கோயிலை சேர்த்த ஒரு வைஷ்ணவ பெரியவர் சொல்லியிருந்தார்.

“அனந்த சரஸ் குளத்து நீர் முழுவதையும் வெளியேற்றி பெருமாளை வெளியே எடுப்போம், பிறகு நாற்பத்தியெட்டு நாட்கள் கழித்து வைக்கும் போது மழை நீர் வந்து தானாகவே குளம் நிறையும்”.

தானாக குளம் எப்படி நிரம்பும், மழை எப்படி வரும் என்று பலர் கேள்வி எழுப்பினார்கள்.

இதோ இன்று அத்தி வரதர் வைபவம் முடிந்து, அனந்த சரஸ் திருக்குளம் செல்ல ஏற்பாடு நடைபெறும் வேளையில் நல்ல மழை.

ஒன்றா இரண்டா அத்தி வரதர் புகழ் பாட ! சொல்லி மாளாது இந்த ஆன்மீக அனுபவங்களையும், மிக ஆச்சரியமான சம்பவங்களையும்.

ஆச்சார அனுஷ்டானங்கள் சரியாக நடக்கும் பொழுது, நடப்பவை எல்லாம் சரியாகவே நடக்கும் என்பது இந்து தர்ம கோட்பாடு.

யாகசாலைகளில் கணீரென்று ஒலிக்கும் இந்து தர்ம வேத பாராயணத்தின் ஒவ்வொரு அட்சரத்துக்கும் தன்னை தானே காத்துக்கொள்ளும் சக்தி உண்டு.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »