






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
வாழ்க்கையில் நீ அனுபவித்த வேதனை, துயரம், மற்ற எந்த இக்கட்டான நிலையை வேறு யாராவது அனுபவித்துக் கொண்டு இருந்தால்
அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியை செய்.
தர்மங்களில் தலையாயது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவது.
அவர்களின் உதவியற்ற நிலைமையைப் பார்த்து எக் காரணம் கொண்டும் ஏளனம் செய்யாதே, சந்தோஷப்படாதே…
யாரேனும் ஏதாவது தீமையை உனக்குச் செய்தாலும்,அதற்குப் பழிக்குப் பழி வாங்க நினைக்காதே. வாழ்க்கை சக்கரத்தில் அவர்களுக்கு நீ ஏதேனும் செய்யும் படி காலம் பணித்தால் உன்னால் இயன்ற நன்மையை செய்.
நான் உன்னோடு இருக்கும் போது…
ஏன் அப்படி நடந்து விடுமோ, இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது என்று எந்நேரமும் கவலைபட்டுக் கொண்டே இருக்கிறாய்.
வருவது வரட்டும், உறுதியாக எப்போதும் நிதானத்துடனும், நம்பிக்கையோடு செயல்பட்டுப் பார்
அப்போது நீ மிகுந்த பலனை அடைவாய்.
ஒரு காரியத்தில் ஏமாற்றமோ, தோல்வியுற்றாலோ வருந்தாதே. அதில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அடுத்த முயற்சியில் திறம்பட செயல்படு.
மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தால் ஏன் எங்கு தவறு செய்கிறோம் என்று ஆராய்ந்து பார். தோல்வி அடைந்தால் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை.
எனவே எதற்காகவும் அஞ்சாதே. இந்த நிலை மாறி நீ விரும்பும் அனைத்தும் கிடைக்கும்.
எனவே கவலைகொள்ளாதே… நம்பிக்கையோடு செயல்படு…
நீ எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் உனக்கு வெற்றி நிச்சயம்.
என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு…
கவலைபடாதே நான் இருக்கிறேன் உன்னோடு என்றும் என்றென்று….
நல்லதே நடக்கும்..!
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ !