கார்த்த வீர்யார்ஜுன மந்திரம் : தொலைந்து போனதை திரும்ப பெற உதவும் மந்திரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

 

வாசக அன்பர்களுக்கு வணக்கம்.இன்று நாம் காண விருக்கிற விஷயம் – பலருக்கும் மிக பயனுள்ள ஒரு விஷயம். அனேகமாக , இதில் நேரடியாக , சொல்லப்படாத மறைமுக விஷயத்தை, தெளிவாக புரிந்து கொண்டால், சில லட்சம் பேருக்காவது உதவியாக இருக்கும்.
புரிந்து கொள்ள முடிந்தால் – நல்லது. இல்லாவிட்டாலும் பரவா இல்லை… !
உங்கள்  இழந்து போன உடமைகள்  எதுவாக இருந்தாலும், அவற்றை மீட்டு தரவல்ல , அதி அற்புதமான மந்திரம் – இந்த கார்த்த வீர்யார்ஜுன மந்திரம்.

உங்கள் வீட்டில் தொலைந்து போன பொருட்களை ,எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லையே என்று விரக்தியில் – விடு , கிடைக்கிறப்போ, கிடைக்கட்டும் என்று விட்டு விடுவீர்கள். ஆனால், ஒரு சில பொருட்களை – அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க முடியாதே, திரும்ப திரும்ப தேடிப் பார்த்து – நொந்து நூலாவது தான் மிச்சம். சிலருக்கு பதட்டமும் அதிகமாகி விடும்.இழப்பு – ரொம்ப கொடுமையான விஷயம். இழப்பின் வலி, தரும் வேதனை – ஆறுதல் மொழிகளால் அடங்குவதில்லை. நீண்ட , நெடு நாட்களாக உயிருக்குயிராக பழகிய நண்பர், சந்தர்ப்ப சூழ்நிலை / விதி வசத்தால், நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல , நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு பழகி இருக்க கூடும். இன்று அவர் மிக உயர்ந்த நிலையில் இருக்க கூடும். அவருடனான நட்பைப் புதுப்பிப்பதின்  மூலம் , உங்களுக்கு நிறைய அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம் / வாழ்வில் மீண்டும் ஒளி கிடைக்கலாம். .

..அவனுக்கே நான் முக்கியம் இல்லை, நான் மட்டும் அவன் கிட்ட பேசணுமா.. னு ஈகோவை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு , அவனா வந்து பேசுனா , ஓகே… அப்படின்னு நினைக்கிறீங்களா..? ( இது பரவா இல்லை )
ஐயா , அவர் வரவே இல்லை… அப்போ…?
யாராவது ஒருத்தராவது இறங்கி வந்தாத்தானே..!
சரி, நீங்களும் வர வேண்டாம்,,, அவரும் வர வேண்டாம்.. ! எதேச்சையா , தன்னாலே நடக்கற மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்துட்டா?  அந்த அதிசயம்  செய்வது தான் இந்த மந்திரம்..!

கார்த்த வீர்யார்ஜுன நாம ராஜா பாஹூ  ஸகஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண { ———-}
கதம் நஷ்டம்ச லப்யதே..

 { ———-}   – இந்த இடத்தில் , நீங்கள் சந்திக்க விரும்பும் உங்கள் நண்பர் பெயரை  / தொலைந்து போன பொருளை சொல்லவும்.
மேலே சொன்ன மந்திரம் தான் , கார்த்த வீர்யார்ஜுன மந்திரம். விரும்பும் நபரை சந்திக்க வேண்டும் என்று ஆன்மார்த்தமாக மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டு – தினம் 1008 முறை , மேலே சொல்லிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். 108 நாட்கள் – தொடர்ந்து ஜெபித்து வர , உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்..
உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளின் மதிப்பை , உலகத்தில் உங்களை விட யாராலும் கணிக்க முடியாது..
108 x 1008 முறை ஜெபம் பண்ணும் அளவுக்கு, அது மதிப்புள்ளதா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.. !

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »