கால சர்ப்ப தோஷ பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

1.முடிந்த நாட்களில் ஒரு இரும்புப் பாத்திரத்தில் பால் கலந்த நீரை வைத்துக் கொண்டு அதை அரச மரத்தின் நிழலில் நின்று மர வேரில் விட்டு வரலாம்.

————————————————————————————————————
2.அமாவாசை அன்று ஆறு அல்லது கடற்கரையில் இதைச் செய்யவும். மூன்று தேங்காய் ,1 கிலோ நிலக்கரி எடுத்துகொண்டு அவற்றைக் கொண்டு தலையை 3 தடவை சுற்றவும்.பின், முதலில் தேங்காய்களையும் பின் நிலக்கரியையும் ஆறு அல்லது கடலில் எறிந்து விட்டு நேரே வீட்டிற்கு வந்து விடவும். வீட்டினுள் நுழையும் முன் கை,கால்களைக் கழுவிக்கொண்டு உட்செல்லவும்.

————————————————————————————————————
3.கீழ் உள்ள மூன்று மந்திரங்களை ஜெபித்து வரலாம்.

ஓம் நவகுலாய வித்மஹே 
விஷதண்டாய தீமஹி 
தன்னோ சர்ப்ப ப்ரசோதயாத் 

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராகவே நமஹ ||

ஓம் ஷ்ராம் ஷ்ரீம் ஷ்ரௌம் சஹ கேதவே நமஹ ||

வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரங்களைத் தினமும் 18 தடவை ஜெபித்து வரலாம்.

————————————————————————————————————

4.கால சர்ப்ப தோஷ நிவாரண மந்திரம் 

ஓம் குரு குரு  குல்லே ஹூம்  பட் ஸ்வாஹா ||

வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வரலாம்.

வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »