சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வி கண்டு வருபவர்கள் இம்மந்திரத்தைத்  தினமும்  கிழக்கு முகமாக அமர்ந்து 108 தடவை ஜெபித்து வரக் காரியத்தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.

ஏதேனும் காரியம் தொடங்கும் முன் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ விநாயகரை வணங்கி எந்தக் காரியம் செய்யவிருக்கிறோமோ  அதைக் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்து கொண்டு இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் துவங்க அதில் வெற்றி உண்டாகும்.

ஏற்கனவே ஆரம்பித்துப் பாதியில் நிற்கும் வேலை சிறப்பாக  நடந்து முடிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 6:30 மணிக்குள்  ஒரு  தேங்காய் வாங்கி தலையை  3 தடவை சுற்றி ஆறு அல்லது நீர் நிலையில் போட்டு விடவும்.பின்னர் ஆலயம் சென்று கணபதியை வணங்கி அவர் முன் கிழக்கு முகமாக அமர்ந்து சங்கல்பம் செய்து மந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வெற்றி கிட்டும்.

எந்தச் செயலைத் துவங்கும் முன்னும் கோயிலில் உள்ள யானைக்குப் பழம், கரும்பு,வெல்லம் கலந்த பச்சரிசி இவற்றில் ஏதாவது கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.

சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம் 

ஓம் கம் கணபதயே கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா ||

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »