சர்வ ரக்ஷாகர ஸ்ரீ சுதர்சன சக்கர மந்திரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :-

ஓம் நமோ சுதர்சன சக்ராய |
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய | 
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||      

மஹாரக்ஷையாக,சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தைச் சித்தி செய்யும் முறை மிக எளிது.ஒரு சூரிய அல்லது சந்திர கிரகணத்தன்று விளக்கேற்றி,ஊதுவத்தி ஏற்றி வைத்து 1008 தடவை ஜெபிக்கச் சித்தியாகும். பின்னர் தேவையான போது 3 தடவை  ஜெபிக்க எந்தவிதமான ஆபத்துக்களில் இருந்தும் ,கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும்.

மருத்துவர்கள் மற்றும் ரெய்கி ,ப்ராணிக் ஹீலிங் போன்ற குணப்படுத்தும் சேவை செய்பவர்கள் ,இந்த மந்திரத்தைக் காலையில் குளித்த பின்  3 தடவை ஜெபித்துத் தலையில் நீர் தெளித்துக் கொள்ள அல்லது அட்சதை போட்டுக் கொள்ள நோயாளிகளிடம் இருந்து நோய் மற்றும் கர்ம வினை தாக்காது தடுக்கும். 

நோய் நீக்கவும்,தீய சக்திகளை விரட்டவும் பல ரகசியப் பிரயோகங்கள் உள்ளன.அவற்றை துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்று அஞ்சி வெளியிடவில்லை.குருமுகமாக அல்லது உங்கள் அருகில் உள்ள விஷயம் தெரிந்த பெரியவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.

உயர்வான பலன் தரும் முறை :-

சித்தபுருஷர்களும், யோகிகளும் இம்மந்திர சித்தியினால் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தைக் காணும் பெரும்பேறு பெற்றிருந்தனர்.மந்திரம் சித்தியான பின்னர் தினமும் நள்ளிரவில் 108 தடவை ஜெபித்து வர சுதர்சன சக்கரத்தைத் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.ஜெபம் செய்யும் போது  பெரும் பிரகாசத்தோடு ஸ்ரீ சுதர்சன சக்கரம் விரிவடைந்து கொண்டே வரும்.அப்படி வந்தால் நீண்ட நேரம் அதைப் பார்க்காமல் கண்களை மூடி வணங்கி ” உங்கள் திருவருள் என்றென்றும் எனக்குக் காப்பாக விளங்க வேண்டுகிறேன் “  என்று வேண்டிக்கொண்டு மந்திரத்தை 3 தடவை ஜெபித்து நீர் அருந்தவும்.

சைவ உணவு உண்பவர்கள் மட்டும் இம்மந்திரத்தை ஜெபிக்கவும்.உங்களையும் வசிப்பிடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.அல்லது ஏதேனும் விஷ்ணு ஆலயத்தில் வைத்து ஜெபிக்கலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »