பஞ்சமியில்_வாராஹி_வழிபாடு


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பஞ்சமி திதியில்
(மாதந்தோறும் 2 பஞ்சமி வரும் ) வாராஹிதேவியை வழிபட்டால், பகையைத் தகர்ப்பாள். பஞ்சமெல்லாம் தீர்த்தருள்வாள்.

சப்தமாதர்களில் ஒரு தேவதையாகப் போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. மகாசக்தி வாய்ந்தவள். இவளை வணங்கி ஆராதித்து வழிபட்டு வந்தால், சத்ரு பயம் நீங்கும். அதாவது எதிரிகள் பயம் இருக்காது. எதிரிகளைத் தோல்வியுறச் செய்து எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குவாள் என்பது ஐதீகம்!

பஞ்சமி தினம் வாராஹியை ஆராதித்து அருள் பெறுவதற்கான அற்புதமான நாள். இந்த நாளில், அவளுக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள் வாராஹி தேவி

பஞ்சமியன்று பின்வரும் 12 பெயர்களை மனதாரப் பிரார்த்திப்போம். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் ஓடும். இன்னல்கள் எங்கேயோ சென்றுவிடும். மனோபலம் பெருகும். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்.

1. 🕉️ பஞ்சமீ
2.🕉️தண்டநாதா
3.🕉️ ஸங்கேதா
4.🕉️ ஸமயேஸ்வரி
5.🕉️ ஸமயஸங்கேதா
6.🕉️ வாராஹி
7.🕉️ போத்ரிணி
8.🕉️ சிவா
9.🕉️ வார்த்தாளி
10.🕉️ மஹாசேனா
11. 🕉️ ஆக்ஞா சக்ரேஸ்வரி
12.🕉️ அரிக்னி

வஞ்சனையில் இருந்து மீட்டெடுப்பாள்.
பஞ்சமெல்லாம் போக்கி அருள்வாள். வாராஹிதேவி…

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »