பிறை பார்ப்பதன் புண்ணியம் No ratings yet.

பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம் என்பது ஐதீகம்…பிறை பார்க்கும் பயன்மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.ஆறுபிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும் ( முத்திப்பேறு )

Please rate this

About the author

Related

JOIN THE DISCUSSION