






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
“நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ?நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்ஆலம்உண்ட கண்டனும் அயனும்அந்த மாலுமாய்ச்சாலஉன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே”.- சிவவாக்கியார் -இரவின் நாலாம் சாமத்தில் துவங்குவதுதான் பிரம்ம முகூர்த்தம் அல்லது அதிகாலை எனப்படும் பொழுது.பிரம்ம முகூர்த்தத்தில் சிவமும்,பிரம்மமும் கூடிக்கலந்த உயர்ந்த பிரம்ம சக்தி முழுமையாக நிறைந்திருக்கிறது. இது மனதையும், நினைவையும் ஒருமுகப் படுத்தி ஒருவர் மேன்மை அடைய அடித்தளமிடும் காலமாகும்எனவே, மனதையும், நினைவையும் ஒருமுகப் படுத்தி மேன்மை அடைய விரும்புவோர் யோகப் பயிற்சிகள் செய்ய இதுவே சிறந்த நேரம் என்கிறார் சிவவாக்கியார்.