நவகிரக தோசங்கள் பூர்வ ஜென்ம பாவங்கள் போக்க No ratings yet.

அரச இலை அதிகம் விஷேசங்கள் நிறைந்தவை. சாபம், தோஷங்கள், பூர்வ ஜென்மத்து கர்மங்கள் இவை அனைத்தையும் நீக்க கூடியது. மரத்தை பூஜை செய்யலாம். அதற்கு வீட்டில் அரச இலை மேல் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். பூர்வ ஜென்மத்து பாவங்கள் தீரும். அரச இலை தீபம் ஏற்றுவதால் பல நன்மைகள் உண்டு. அரச இலை வைத்து அதன் மீது அகல் விளக்கு ஏற்றுவது நன்மை தரும். இதற்கு பொதுவாக நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது. சனி தோஷம், சர்ப்ப தோஷம், ராகு தோஷம், கேது தோஷம், நவகிரக தோஷம் போன்ற பல தோஷங்களை போக்கும். திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் மூன்று தீபம் ஏற்ற வேண்டும். செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் 2 தீபம், புதன் கிழமையில் பிறந்தவர்கள் 3 தீபம், வியாழக் கிழமையில் பிறந்தவர்கள் 5 தீபம், வெள்ளிக் கிழமையில் பிறந்தவர்கள் 6 தீபம், சனிக் கிழமையில் பிறந்தவர்கள் 9 தீபம், ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்கள் 12 தீபம் ஏற்ற வேண்டும்.
அரச இலையின் காம்பு சுவாமியை பார்த்த மாதிரியும், இலையின் முனை நம்மை பார்த்த மாதிரி இருக்க வேண்டும். இதற்கு உரிய மந்திரங்களை சொல்ல வேண்டும். பரிகார தீபங்கள் எப்போதும் சாமியை பார்த்தவாறுதான் ஏற்ற வேண்டும். தீபம் முன்னாடி அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நமது அனைத்து பிரச்சனைகளும் தீர்வதோடு
தோசங்களும் நிவர்த்தி ஆகும்.

மகாலெட்சுமி அருள் பெற வெற்றிலை தீபம் ஏற்ற வேண்டும்.

Please rate this

About the author

Related

JOIN THE DISCUSSION