நரகம் சொர்க்கம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

“நரகம் சொர்க்கம்”!!!

“உனக்குள் சோகம் என்றால் மற்றவர்களிடமும் சோகத்தையே காண்பாய்.

பௌணர்மி நிலவிலும் சோகத்தைக் காண்பவன் சோகித்திருப்பவன்.

இருட்டு வானத்திலும் வெளிச்சத்தைக் காண்கிறவன் மகிழ்வோடு இருப்பவன்.

எல்லாம் உன்னைப் பொறுத்தது தான்.

நீ எப்படி இருக்கிறாய் என்பதைப் பொறுத்தது தான்.

உலகம் முழுவதும் உன் நெஞ்சோடு ஒத்துப் போகிறது.

நீ என்னவாக இருக்கிறாயோ அதுவாக ஆகிப் போகிறது.

புனிதமானவர்கள் , தியானித்து இருப்பவர்கள், பிரார்த்தித்து இருப்பவர்கள் சொர்க்கத்துக்கு போகிறார்கள் என்று திரும்பத் திரும்ப சொல்லக் கேட்டிருப்பாய். அது தவறு . அதற்கு நேர் எதிரிடையே உண்மை .

தியானித்து இருப்பவனை நோக்கி சொர்க்கம் வருகிறது. அவன் சொர்க்கம் போகிறான் என்பதல்ல . சொர்க்கம் அவனிடம் அவனுடைய நெஞ்சத்திடம் வந்து சேர்கிறது.

அவன் எங்கே இருக்கிறானோ அதுவே சொர்க்கம். விழிப்பற்றவன் எங்கே இருக்கிறானோ அது நரகம்.

எங்கேயும் நரகம் இல்லை , சொர்க்கமும் இல்லை.

ஆனந்தமாக இருக்கிறாய் என்றால் சொர்க்கத்தில் இருக்கிறாய்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »