*டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*டிசம்பர் மாதம் ஸூர்ய கிரஹணம்*

நாள் :: 26-12-2019, வியாழக்கிழமை

நேரம் :: காலை 8.09 முதல் 11.20 மணி வரை

நல்ல தேஹ ஆரோக்கியம் கொண்டவர்கள் 25ம் தேதி சூரிய அஸ்தமன நேரமான மாலை 5.50க்கு பிறகு எவ்வித ஆஹாரத்தையும் எடுத்து கொள்வதற்கில்லை.

நடுத்தர ஆரோக்கியம் கொண்டவர்கள் 25ம் தேதி இரவு 1.30 வரை ஏதாவது மித ஆஹாரம் எடுத்து கொள்ளலாம்.

ஆரோக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் முதலானோர் 26ம் தேதி விடியற்காலை 5.25 மணி வரை ஏதாவது மிக மிக மிதமான ஆஹாரம் எடுத்து கொள்ளலாம்.

*அன்றைய தின ஆசார அனுஷ்டானம் ::* –

காலையில் வழக்கம் போல் ஸ்நானம், ஸந்த்யா வந்தனம் முதலானதுகளை முடிக்க வேண்டும்.

கிரஹணம் பிடிக்கும் சமயமான 8.09க்கு இரண்டாவது ஸ்நானம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு இடைவிடாது ஜபம் முதலானதுகளில் ஈடுபட வேண்டும்.

கிரஹண சமயத்தில் ஒரு இம்மியளவு நேரத்தையும் வீணடிக்க கூடாது.

9.35க்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

11.20 மணிக்கு விட்ட ஸ்நானம் செய்ய வேண்டும்.

அதன் பிறகுதான் பூஜை, சமையல் முதலானதுகள்.

அன்றைய தினம் ஹனுமத் ஜெயந்தி விழாவை 11.20க்கு பின்னரே கொண்டாட முடியும்.

குருவின் ப்ருந்தாவனங்களுக்கு ஹஸ்தோதகம் கிடையாது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Comments

  • Venkatarama N December 24, 2019 at 3:15 pm

    Namasthe, ji….
    I am in Dubai. pl tell me the timings of various occasdions of Surya Grahan on 26 Dec 2019

    Reply
Translate »