பணக்கார கடவுளான குபேரனுக்கு பணக்கஷ்டம் வந்த போது என்ன செய்தார் தெரியுமா..?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உலகிலேயே பணக்கார கடவுள்…யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனாலும் பணம் வேண்டுமென்றால் குபேரனைத்தான் வழிபடுவோம்…

குபேரன் மாதிரி பணக்காரனாக வேண்டும் என்னும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அந்த குபேரனுக்கே பணத்தட்டுப்பாடு வந்த போது என்ன செய்தார் தெரியுமா?

போர் ஏற்பட்ட காலத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தம்மிடம் இருந்த செல்வம அனைத்தையும் இழந்துவிட்டான் குபேரன்….

செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்தபோது சிவபெருமானிடம் சென்று முறையிட்டான்.

“நெல்லிமரங்களை நட்டு வளர்த்துவிட்டு அது வளர்ந்ததும் என்னை வந்து பார்” என்றார்.

செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமான் சொன்னாததால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தான்.

நெல்லிமரங்கள் பராமரிப்பிலும் குறைவைக்க வில்லை… ஏனெனில் சிவபெருமானின் ஆணையாயிற்றே.. நாள்கள் கடந்துவிட்டது…
நெல்லிமரங்கள் அனைத்தும் பூ பூத்தது… காய்காய்த்தது.காய்களெ
லாம் இனித்தது.குபேரனின்வாழ்வுபழமையாக
திரும்பிற்று…

சூழ்ச்சி செய்து செல்வம் பறித்தவளங்களையெல்லாம் மீண்டும் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகளெல்லாம் திரும்ப கிடைத்தது.

குபேரனை விட பெரிய அரசனெல்லாம் ஓடி வந்து கப்பம்கட்டதொடங்கினார்கள். இழந்த செல்வங்களோடு மீண்டும் புதிய செல்வங்களும் பெருகியது..

குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக்கணைகள்.. எப்படி இது சாத்தியம் மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்… “நெல்லிமரங்கள் வளர்ந்ததா.. இழந்த செல்வம் கிடைத்ததா?” என்றார் சிவப்பெருமான்.

”நெல்லிமரம் வளர வளர செல்வம்கிடைத்தகாரணத்தைப்புரிந்துகொள்ள முடியவில்லையே” என்றார் குபேரனும் விடாமல்.. ”நீ வைத்தது நெல்லிமரங்கள் அல்ல லட்சுமி தேவிகள்..

உரிய முறையில் அவற்றுக்கு நீரூற்றினாய் அதனால் நீ செய்த பாவங்களைத் தொலைந்து லட்சுமி தேவியின் அருளை பெற்றாய்”… என்ற சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதையை சொல்லலானார்.

தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லி மரம்… அதனால் தான் இது தெய்விக மரம் என்று சொல்கிறார்கள் என்றார்…

லட்சுமி சொரூபமான நெல்லி மரத்தை வளர்த்து லட்சுமி கடாட்சத்தைப் பெற்று மகிழ்வோம்..
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »