பிரம்ம முகூர்த்தத்ம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஒரு நாளை பகல் ஐந்து பாகங்களாகவும் இரவு ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இதுதான் ஒருநாள் இங்கே நாள் என்பது சூரிய உதய நாழிகை முதல் கணக்கிடப்பட வேண்டும்.
பகல் 12 மணி நேரத்தை 5 ஜாமங்களாகவும் இரவு 12 மணி நேரத்தை ஐந்து ஜாமங்கள் ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜாமத்துக்கு 2 மணி 24 நிமிடங்கள் ஆகும்.
இரவின் கடைசி ஜாமம் என்பது அதிகாலை 3 36 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள காலமாகும்.
பகலின் முதல் ஜாமம் என்பது காலை ஆறு மணி முதல் 8 24 மணி வரை உள்ள காலமாகும்.
பஞ்சபூதங்களில் நிலத்தை விட நீர் வலிமையானது.
நீரைவிட நெருப்பு வலிமையானது.
நெருப்பை விட காற்று வலிமையானது.
காற்றைவிட ஆகாயம் வலிமையானது.
பஞ்சபூதங்களில் நிலம் நீரில் ஒடுங்கும்.
நீர் நெருப்பில் ஒடுங்கும் நெருப்பு காற்றில் ஒடுங்கும் காற்று ஆகாயத்தில் ஒடுங்கும்.
பஞ்சபூதங்களும் ஆகாயத்தில் ஒடுங்கி நிற்கும் காலமே பிரம்ம முகூர்த்த வேளை ஆகும்.
பிரம்ம முகூர்த்தம் என்பது ஆகாய பூதம் ஆட்சி செய்யும் நேரமான அதிகாலை 3. 36 முதல் காலை 6 மணி வரை உள்ள பொழுதாகும்.
பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள் எளிதாக இறைவனை சென்றடையும் தியானம் எளிதாக கைகூடும்.
ரிஷிகள் சித்தர்களின் அருளாசியை பெற விரும்புபவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து
ஜெபம் தவம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »