பிரம்ம முகூர்த்தம் மகிமை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.*

*பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.*

*சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.*

*பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெறும் என்று கூறுவோம்.*

*அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.*

*காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும்* *எழுந்திருப்பதே*
*( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை* *சிருஷ்டி (படைத்தல்)என்றுசொல்லலாம்.*

*இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.*

*பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து,*

*( சிவ வழிப்பாட்டைச் செய்வது)*
*நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும் நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத்தான் இருக்கும்*

*பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் நிச்சயம் பெறலாம் என்பது ஐதீகம்.*

*உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.*

*மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது.*

*இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.*

*அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.*

*இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள் என்று*

*புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.*

*அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்) படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.*

*அதிகாலையில் பிள்ளையார் அமர்ந்திருக்கும் அரச மரத்தை*
*சுற்றி வணங்கி வந்தால் பிரம்மிக்க தக்க சக்தி நம் உடம்பிலும் மனதிலும் ஏற்படும்.*

*இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது.*

*ஆகவே நாம் நம் பெரியோர்கள் வாழ்ந்து காட்டியவாறு நாமும் வாழ்ந்து மற்றோர்களையும் சிவபெருமானின் பெருங்கருணையால் வாழவைத்தும் காட்ட வேண்டும் என்ற உறுதிபாடு பிரம்ம முகூர்த்தத்தில் கட்டாயம் கடைப்பிடித்து வாழ வேண்டும்.*

ஆன்மீக சேவையில்

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »