நவ பாஷாணம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சிவாய நம 🕉🕉🕉

♻நவ பாஷாணம்♻

🌹நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

🌹பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

🌹ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும்சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

🌹1. .சாதிலிங்கம்.
2 .மனோசிலை
3 .காந்தம்
4 .காரம்
5 .கந்தகம்
6 .பூரம
7 .வெள்ளை பாஷாணம்
8 .கௌரி பாஷாணம்
9 .தொட்டி பாஷாணம்🌹

🌹இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

🌹தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

🌹நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் /சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.

♻நவபாஷாணம் வகை♻
எண்வகை தோஷம்:ரசத்துக்கு எட்டு தோஷம் உண்டு. அவை சர்ப்பம், வங்கம், கந்தி, வன்னி, சஞ்சலம், மலம், காளம், மந்தம் என்பன. அவற்றை நீக்காமல் அந்த ரச மருந்தை சாப்பிடுபவர்களுக்கு முறையே விரணம், பெருவியாதி, நீச்சுவாலை, தபித்தல், உதிரப்பசையற்ற தேக நிறம், வீரிய நாசம், மரணம், சோபம் ஆகியவை உண்டாகும்.

♻பாதரசம்♻
சிவ வீரியம் என்னும் ரசத்தை பற்றி ஜீவ ரட்சாகுர்த நூலில் கூறிய முறைப்படி செய்யத்தக்க சுத்தியெல்லாம் செய்து பிரயோகித்தால் நேத்திர நோய், நரம்புக்கிரந்தி, அஷ்ட குன்மம், கீல் பிடிப்பு, மகா விரணங்கள்,பெரு வியாதி, வாதம் முதலிய நோய்கள் குறையும்.

♻பாதரசதோஷம்♻
பாதரசத்தை சுத்தி செய்யாமல் பிரயோகித்தால் ஏற்படக்கூடிய தோஷங்களாவன: துணியை கிழித்தல், கல்லால் அடித்தல், நீரில் மூழ்கி மூழ்கி எழுதல், மயங்கி விழுதல், தேகத்தில் அழலை உண்டாக்குதல், மாறாமல் வாயில் நீர் ஊறல், வேர்வை பெருகுதல், பிரலாபித்தல் ஆகியன.

♻ரசாஞ்சனம்♻
பூ படலம், விழிப்புண், குய்ய ரோகப்புண், ஆறாதக்கிரந்திகளும் தீரும்.

♻ரசக்கற்பூரம்♻
சுத்தி செய்யப்பட்ட ரச கற்பூரத்தை நோய்களின் வன்மைக்கு ஏற்றவாறுநல்ல வெல்லத்தில் அளவாக வைத்து ஏழு நாட்கள் சாப்பிட்டால் சகனா வர்த்த வாதப்பிடிப்பு, பித்தம், வயிற்று நோய், சிலேஷ்ம ஊறல், வாதம், சோணித வாதம் ஆகியவை நீங்கும்.

♻சாதிலிங்கம்♻
சிவந்த சாதிலிங்கம், அதிசாரம், ரூட்சை, சந்நிபாதம், அற்புதப்புண்,அதிமூத்திரம், காணாவிஷம், இருமல், கரப்பான், சிரங்கு, நுணாக்காய் கிரந்தி, குண்டல குஷ்டம், சாமை சரீர குத்தல், வாத நோய், அந்தர் முக ரோகங்கள் ஆகியவற்றை விலக்கும்.

♻சவ்வீரம்♻
குன்மம், முறைநோய், மகா வாதங்கள்,கீல்பிடிப்புகள், அரிசோரோகம் ஆகியவை நீங்கும்.

♻நெல்லிக்காய் கந்தகம்♻
குட்டம், அலஜம், வல்லைக்கட்டி, கவிகை, மகோதரம் குன்மம், குந்த நோய், மகாவிஷம், மேக வியாதி, வாதசுரம், வாதாதி சாரம், சுபகிரகணி, கபாதிக்கம் ஆகியவை நீங்கும்.

♻வாண கந்தகம்♻
ச தாதுக்களில் பிறந்த ஒரு கிருமி, தோல் நோய்கள் ஆகியவை போகும்.

♻தாளகம்♻
அதிசிக்வா ரோகம், தானாகச்ச கப நோய், குட்ட ரோகம், நடுக்கற்சுரம், காச சுவாசம், துஷ்ட விரணம், ஜலஸ்ராவம், சிரஸ்தாப ரோக ஆகியவை விலகும்.

♻சிவந்த அரிதாரம்♻
சிவந்த கல்லைப்போல் இருக்கின்ற அரிதாரத்தை சுத்தி செய்து கிரமமாக உண்டால் குளிர் சுரம், மாவாத ரோகம், சரீரக்குத்தல், தினவு, கிடிபகுட்ட ரோகம் ஆகியவை நீங்கும்.

♻மடல்
அரிதாரக்காடுகள்♻
மடல் அரிதாரத்தில் பலவகை கட்டி என்கிற இரண்டு வித கரடுகளாலும் உடலில் ஊறிய விஷங்கள் நீங்கும்.

♻மனோசிலை♻
சருமக்குட்டம், குளிச்சுரம், அஜகள்ளி காரோகம், சுவாசம், சிலந்தி விஷம் ஆகியவை போகும்.

♻மடல் அரிதாரம்♻
தமக சுவாசம், காசம், சிலேஷ்ம வாத ரோகம், அட்ட குன்மம் ஆகியவை போகும்.

♻அரிதாரம்♻
காசம், ரோக ராஜம், சிலேஷ்ம வாத ரோகம், அட்ட குன்மம் ஆகியவை போகும்.

♻பொன் அரிதாரம்♻
மந்தார சுவாசம், வாத சுரம், சத்திக்கிற சயம், செய்யான் விஷம், சருமதல குட்டம் ஆகியவை நீங்கும்.

♻மிருதார்சிங்கி♻
உடல் முழுவதும் பரவுகின்ற பித்த விரணம், கரப்பான், கிரந்தி கூட்டம், மகாவிரணம் ஆகியவை நீங்கும்.

♻வெள்ளை பாஷாணம்♻
பச்சையாக அரைத்து கடிவாயில் பூசினால் சர்ப்ப விஷம் தீரும். கிரமமாக சாப்பிட்டால் கபசுரம், திரிதோஷம், சந்நிபாதம், துட்டபீநசம், முகபாகம், கீழ்ப்புண் ஆகியவை நீங்கும்.

♻கொளரி பாஷாணம்♻
மகா வாதமும், அலசமும், வாத கப சுரங்களும் ஆகியவை விலகும்.

♻நீலாஞ்சன பாஷணம்♻
ரசவன்னி தோஷம், ஆகந்து, விரணம், பிரமேகம், விழிப்பிணி, சந்நி சுரம், புழுவெட்டு, விதாகம், உட்சூடு இரத்த பித்தம் ஆகியவை விலகும். தேஜஸ், குளிர்ச்சி, அழகு, பலம் ஆகியவை அதிகரிக்கும்.

♻தொட்டி பாஷணம்♻
ரூட்சை, சிரங்கு, வாதாதிக்கம், அஜீரணம், மூளை விரணம் ஆகியவை நீங்கும்.

♻பஞ்ச பாஷாணம்♻
சுரம், நளிர்மேகம், விழி சதை ஆகியவை நீங்கும்.

♻பஞ்ச பாஷாணம்♻
சுரம், நளிர்மேகம், விழி சதை ஆகியவை நீங்கும்.

♻நவ பாஷாணம்♻
இதை சிந்தூரம் செய்து சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும். மகா வாதமும், பல சுரங்களும் போகும்.இவை அனைத்தும் பாஷாண வகைக‌ள் மற்றும் அவற்றால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகும். இதை அறிந்து கொண்டு சிறந்தவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

இறைவழியில்

♻ஓம் மஹா ம்ருத்யுஞ்சயம்♻

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »