இறைவன் /கடவுள் /இதன் பெயர்களும் விளக்கங்களும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இறைவன் /கடவுள் /இதன் பெயர்களும் விளக்கங்களும்

கடவுள் -வெட்டவெளி- சுத்தவெளி-
சூனியம்- சர்வ வியாபி- நிகரற்றது- நிர்மலன் – நிர்குணன் – உயிர் -சிவம்- இத்தனை பெயர் கொண்ட இன்னும் நிறைய இருக்கு

கடவுள் = என்பதன் விளக்கம்
கடவுள் = கடம் (கடவுள் )+ உள் (கடம் என்றால் உடம்பு)
உடலுக்கு உள்ளே இருப்பது
இறைவனை தன்னுள் உணர்ந்தவர்கள்
உடலுக்குள் தான் கடவுள் இருக்கிறார் என்று சொல்லி வைத்தார்கள் மற்றும் எழுதியும் வைத்தார்கள் உதாரணம் திருமந்திரம் /சிவவாக்கியம்
இன்னும் பல நூல்கள் உள்ளன

பகவான் என்பதன் விளக்கம்

பகவான் = பகா+ வான்
பகுக்க /வெட்ட /பிளக்க / பிரிக்க
முடியாத வான்

இறைவனை உணர்ந்த
மனிதனின் சான்று
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு ( திருக்குறள்)

எந்த ஒன்றை வெட்டவோ அல்லது பிரிக்கவும் முடியாதோ அதுதான் கடவுள்

விஞ்ஞானிகள் அணுக்கள் வரை பிரித்துள்ளனர் ஆனால் அதையும்
தாண்டி பிரிக்க முடியாதது
எதுவோ (space) இதைப்
பகுக்க முடியாத வான்
அதைத்தான் கடவுள் என்று சொல்லி வைத்தனர்

இந்த அண்ட சராசரமும்
செடி புல் பூண்டு
எல்லா உயிரினங்களும்
அவனுள் அடக்கம் ஆனால் அவனோ நம்முள் அடக்கம்

ஏன் அவன் நம்முள் அடக்கம்
இத்தனை உயிர்கள் இடம் இருக்கும்
அவன் ஏன் நம்முள் இருக்கிறார்
என்றாள்

நமக்குத்தான் ஆறறிவு கொடுக்கப்பட்டது அந்த ஆறாவது அறிவு
பகுத்துப் பார்க்கத் தான் அதனால்தான் அதற்கு பகுத்தறிவு என்று சொல்லி வந்தனர்

அந்த பகுத்தறிவை வைத்து நம் உடம்புக்குள் அவர் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள்
அதைவிட்டு எனக்கு பகுத்தறிவு கடவுள் இல்லை என்று சொல்பவன்
அறிவின்மை காரன் …

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »