நோய் தீர்க்கும் “சர்ப்பக்குறியீடு” ரகசியம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நோய் தீர்க்கும் “சர்ப்பக்குறியீடு” ரகசியம்

இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக் கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும் (Visiting Card), முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும் (Letter pad) காணலாம். அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும், அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம். ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். இந்த கற்சிலைகளைப் பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது.
இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள். இதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள்.
இந்த விசயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது. ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்), சத்ருகாரகன் (பகைக்கு காரணமானவன்), ருணக்காரகன் (கடன் தொல்லைக்கு காரணமானவன்) என்று பெயர். இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது, அதாவது செயலற்று போகிறது. “ஆயில்யம்” என்றால் “பிண்ணிக் கொள்வது” அல்லது “தழுவிக் கொள்வது” என்று பொருள்படும்.
இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணிக்கொன்டிருக்கும் பாம்பின் உருவமாகும். எனவே பிண்ணிக்கொன்டிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ரகசியமாகும்

About the author

JOIN THE DISCUSSION