கோவிலில் வழிபடும் முறைகள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*🔯கோவிலில் வழிபடும் முறைகள்🔯*

குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும்.

 கோவிலில் உள்ள குளத்தில், அல்லது அங்குள்ள தண்ணீர் குழாயில், கைகால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லவும்,

 கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.

முதலில் கோபுரத்தை வணங்கிவிட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்,

 கொடிமரம் பலிபீடம் நமஸ்கரிக்க வேண்டும்,

 சிவன் கோயில் என்றால் விநாயகரை முதலில் வணங்க வேண்டும்,

 பெருமாள் கோயில் என்றால், கருடாழ்வாரையும் முதலில் வணங்க வேண்டும்,

 கோவில் பிரகாரத்தை வலம் வர வேண்டும்,

 கோவில் படியை தொட்டு நெற்றி புருவத்தில் மோதிரவிரலால் சற்று அழுத்த வேண்டும்,
படியை
தாண்டி செல்ல வேண்டும்,

இறைவனுக்கு முன்னால் இருபுறமும் இருக்கக்கூடிய துவாரபாலகர் களிடம் அனுமதி பெற வேண்டும்,

 சிவன் கோயில் என்றால்

சிவனை முதலில் தரிசிக்க வேண்டும்

பின்னர் அம்பாளை தரிசிக்க வேண்டும்,

 பெருமாள் கோயில் என்றால்

தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்,

பின்னர் பெருமாளை சேவிக்க வேண்டும்,

சிவன் கோவில் என்றால் வில்வத்தாலும்,

பெருமாள் கோவில் என்றால் துளசியாலும்

அர்ச்சனை செய்ய வேண்டும்.

 சிவன் கோயில் என்றால் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும்

 பெருமாள் கோவில் என்றால் தீபாராதனையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

தீபாராதனையின் போது கண்களை நன்றாக திறந்து இறைவனை நன்றாக தரிசனம் செய்ய வேண்டும்,
கண்களை மூடிக்கொள்ள கூடாது.

 கோவிலில் உள்ள எந்த சாமி சிலைகளையும் தொட்டு வணங்குதல் கூடாது,

 கொடிமரத்திற்கு முன்னால் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்

இறைவனுக்கு முன்னால் எதிரெதிரே நின்று தரிசிக்கக் கூடாது

இறைவனுடைய கடைக்கண் பார்வை குளிர்ச்சியான பார்வையே நன்மை ,

விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக்கரணம் போட வேண்டும்.

விநாயகரை ஒரு முறையும்,

சூரியனை 2 முறையும்,

 அம்பாளையும், விஷ்ணுவையும் 4 முறையும்,

 ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது.

 அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

நமது வேண்டுதல்களை யெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.

அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம்,

நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.

ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது.

ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும்.

 சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.

 கோவிலில் கொடுக்கக்கூடிய குங்குமம், விபூதி,
கைகளில் மாற்ற
கூடாது,
மோதிரவிரலால் அணிந்துகொள்ள வேண்டும்

கிழக்கு முகமாக நின்று
அல்லது வடக்கு முகமாக நின்று,
இட்டுகொள்ள வேண்டும்,

 இறைவன் சன்னதிக்கு முன்னால் அனுமதி கொடுத்தால்,
இறைவனை பற்றி பாடுவது மிகவும் சிறப்பு,

 ஒருவர் இறைவனை தரிசனம் செய்யும்பொழுது குறுக்கே செல்லுதல் கூடாது,
இடையூறாக இருக்கவும் கூடாது,

இறைவனின் முன் காயத்திரி மந்திரம் சொல்வது மிகவும் சிறப்பு,

 கோவிலில் கொடுக்கக்கூடிய விபூதி , குங்குமத்தை, தூய்மையான எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரில் மடித்து வைத்துக் கொள்வது சிறப்பு,

நியூஸ் பேப்பர் மற்ற தேவையற்ற செய்திகள் உள்ள பேப்பரில் விபூதி குங்குமம் மடித்து வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது,

ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையை போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

சண்டிகேஸ்வரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக்கூடாது.

சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேஸ்வரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

சிவன் கோவிலில் காலபைரவரையும்,

 பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.

 சிவன் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பின்னர் வீட்டிற்கு செல்ல வேண்டும்,

 பெருமாள் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டு விட்டு நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும், உட்காரக்கூடாது,

கோவிலுக்கு சென்றுவிட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும்,

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »