*எளிமையாக வெள்ளிக்கிழமை பூஜை செய்வது எப்படி?*


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*எளிமையாக வெள்ளிக்கிழமை பூஜை செய்வது எப்படி?*

சுக்ர வாரம் என்ற வெள்ளிக்கிழமை அன்று அம்பிகைக்கு பூஜை செய்வது மிகவும் விசேஷம். தொடர்ந்து வெள்ளிக்கிழமை பூஜை செய்ய, நோய், கடன், வறுமை தீரும். சந்தோஷமான வாழ்வு கிட்டும்.

👉🏼 வெள்ளிக்கிழமைக்கு முதல் நாளான வியாழக்கிழமை அன்றே வீட்டை மெழுகி சுத்தம் செய்து, விளக்கு மற்றும் பூஜை பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

👉🏼 அதிகாலையிலே எழுந்து நீராடி, வீட்டை பெருக்கி, வாசல் தெளித்து மாக்கோலம் இட வேண்டும்.

👉🏼 வீட்டு விளக்கு மற்றும் தெய்வங்களுக்கு சந்தனம் குங்குமம் சாற்றவும்.

👉 “ஓம் ஒளி வளர் விளக்கே போற்றி” என்று சொல்லியபடி விளக்கேற்றவும். வீட்டில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் விளக்குக்கும் மலர் சாற்றவும்.

👉🏼 கணபதியை நினைத்து வழிபாடு செய்த பிறகு, அம்பிகையை பூஜிக்கவும். தெரிந்த அம்பிகை போற்றி, துதிகளை சொல்லி அர்ச்சனை செய்யவும்.

👉🏼 தெய்வங்களுக்கு, பத்தி, தசாங்கம், சாம்பிராணி தூபம் காட்டவும். வீடெங்கும் சாம்பிராணி காட்டவும்.

👉🏼 பின்னர் தீபம் காட்டவும். நைவேத்யமாக வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வடை என ஏதாவது தங்களால் முடிந்தததை பக்தியுடன் சமர்ப்பணம் செய்யுங்கள்.

👉🏼 நிறைவாக கற்பூர ஆரத்தி காட்டி, நமஸ்காரம் செய்யுங்கள்.

👉🏼 வீண் பேச்சுகளை தவிர்த்து, அன்று முழுவதும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தேவியின் திருநாமங்களையே சொல்லுங்கள்..

👉🏼 அபிராமி அந்தாதி, துக்க நிவாரண அஷ்டகம், துர்கா அஷ்டகம், லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி என தெரிந்த அம்பிகை துதிகளை பாராயணம் செய்யுங்கள்.. அன்னையின் அருள் கண்டிப்பாக கிட்டும்

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »