இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றும் உயர்ந்தவை அவனிடத்தில்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

🌼” ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.

🌼 ” அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே.

🌼 ” கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது.

🌼” கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியை பார்க்கும் வரை.

🌼 ” அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது.

🌼 ” காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது.

🌼 ” உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம். இதுதான் மகிழ்ச்சி என்று.

🌼 ” அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள்.

🌼 ” என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர், என்றது.

🌼 ” மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று.

🌼 ” ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது.

🌼 ” இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை.

🌼 ” எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே, என்றது .

🌼” இதுதான் நமது பிரச்சினையும்.

🌼” நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம்.

🌼 ” நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை.

🌼 ” அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை.

🌼 ” இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது.

🌼 ” ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை.

🌼 ” உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள்.

🌼“உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.

🌼 “இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றும் உயர்ந்தவை அவனிடத்தில்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »