*நம் நாவில் உலாவும் பலவகையான பேச்சு..*


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

🌹🌹🌹🌹

*நம் நாவில் உலாவும் பலவகையான பேச்சு..*

🌹🌹🌹🌹

1. # அன்புப் பேச்சு :

நட்பையும், பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்தி உறவுகளை தழைக்கச் செய்யும். இன்பத்தின் இதய மூச்சு. இரும்புக்கதவையும் திறக்கும் சக்தி

2. # அமைதிப் பேச்சு :

அக்கறையையும், அன்பையும், பிறர் நலனில் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும்

3. # ஆலோசனைப் பேச்சு :

உறவையும், நட்பையும் உறுதிப்படுத்தி உயர்வுக்கு வழி காட்டும்

4. # ஆணவப் பேச்சு :

அற்ப சந்தோசத்தை முதலில் தந்து, முடிவில் அழிவைத் தந்து விடும்

5. # அவமானப் பேச்சு :

அடுத்தவரை துன்புறுத்தி காயப்படுத்தும்

6. # வாழ்த்துப் பேச்சு :

பேசுபவருக்கும், கேட்பவருக்கும் மகிழ்வைத் தரும்

7. # மகிழ்ச்சிப் பேச்சு :

நிரந்தர இன்பத்தைத் தரும்

8. # மழலைப் பேச்சு : மகிழ்ச்சி தரும்

9. # மங்கையர் பேச்சு : மயக்கம் தரும்

10.# திமிர் பேச்சு :

முட்டாள் தனத்தை பறை சாற்றும். அறியாமையை, கல்லாமையை, புரியாமையை வெளிச்சம் போட்டு காட்டும்

11.# வீண் பேச்சு :

நேரத்தை வீணடிக்கும், விபரீதத்தை தேடித்தரும், வம்புகளை வளர்க்கும், வளர்ச்சியைத் தடுக்கும்

12. # பயப் பேச்சு : பீதியைக் கிளப்பும்

13. # கண்டனப் பேச்சு :

எதிர்ப்பையும், வெறுப்புணர்வையும் வெளிப்படுத்தும்

14.# கவிதைப் பேச்சு :

கவர்ச்சி நிறைந்திருக்கும்

15 . # பண்புப் பேச்சு : பயன் தரும்

16. # பயனற்ற பேச்சு :

பலர் வெறுப்பைத் தேடித்தரும்

17. # இனிமையான பேச்சு :

வாழ்வில் உயர்வைத் தரும். காரியம் கைகூட வைக்கும்

18. #தெளிவான பேச்சு :

குழப்பத்திலிருந்து காக்கும்

19. # நிதானப் பேச்சு :

நாளும் நன்மையைத் தரும்

20. # ஏளனப் பேச்சு, கேலிப் பேச்சு,

கிண்டல் பேச்சு. இழிவுப் பேச்சு : தற்காலிக இன்பத்தைத் தரும்

அத்தனையும் உள்ளடக்கியது வள்ளுவரின் இனியவை கூறலும், பயனில சொல்லாமையும்..

நம் பேச்சு எவ்வகை நம் சிந்தனைக்கு…….

நிரந்தரமில்லாத வாழ்க்கையில்

கொண்டு செல்ல ஒன்றுமில்லை இவ்வுலகில்…!!!

மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும்

நாம் சந்திக்கும் மனிதர்களிடம்

# அன்பாகவும் # இனிமையாகவும் பேசி

கடந்து செல்வோமே….!!!

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »