சனி பகவான் யார்?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மகாதேவரின் அம்சத்தில் சூரியபகவானின் இரத்தத்தில் சாயாதேவியின் அரவணைப்பில் மகனாக பிறந்தார் சனிபகவான் இவருக்கு தபதி என்னும் இளைய சகோதரி உள்ளார் அவர்தான் தற்போது வடமேற்கு இந்தியாவில் நதியாக பயணிக்கிறார் இவருக்கு யமன் யமுனை மூத்த சகோதர சகோதரிகள் ஆவர் அதேபோல் அஸ்வினி குமாரர்கள், இவரது இளைய சகோதரர்கள் ஆவர் இவருடைய சக்தி வடிவம் நீலாதேவி ஆவார் அதன் சக்தி கொண்டதால் தான் இவருக்கு அலிதன்மை வந்தது ஆனால் பெரும்பாலானோர் நீலாதேவிதான் சனிபகவானின் மனைவி என்று கூறுவார்கள் அது தவறாகும் நீலாதேவி என்பவர் “நீலி” என்பார்கள் இந்த நீலி பார்வதி தாயரின் சக்தியின் ஒரு அங்கம் ஆவார் சனிபகவானுக்கு பார்வதி தேவி அருளிய சக்தியாகும் ஆனால் இவருடைய மனைவி மகாலட்சுமி தாயாரின் இளைய சகோதரி ஜெஷ்டா தேவி ஆவார் அவர்தன் சனிபகவானின் மனைவி ஆவார் என்னதான் சனிபகவான் திருமணம் செய்துகொண்டாலும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை உலக நன்மைக்காவும் கடமைக்காகவும் சனிபகவான் நாராயணரை போல் ஒரு ஏகபத்தினி விரதராவார் பெரும்பாலானோர் மாந்தி மற்றும் குளிகன் ஆகிய இரண்டு மகன்கள் என்று சொல்வார்கள் அது தவறு மாந்தியும் குளிகனும் இருவரும் ஒரு நபரே அதாவது சனிபகவானிற்கு ஒரு மகன் மட்டுமே அந்த மகன் மகாதேவர் மற்றும் மகாகாளியின் அருளாலும் குருபகவானின் ஜீவன சக்தியாலுமும் சனிபகவானின் தவத்தின் சக்தியால் தோன்றியவராவர் நிறையபேர் மாந்தி ஜேஷ்டாதேவி சனிபகவானிற்கு பிறந்தார் என்று சொல்வார்கள் அது தவறாகும் மகாதேவர் மற்றும் குருபகவான் ஜீவனத்தில் குளிகனாகவும் மகா காளி மற்றும் சனிபகவான் சக்தியில் மாந்தியாகவும் இரண்டு அடையாளங்களாக செயல்படுவார் சூரியதேவரும் சனிக்கும் இடையே உள்ள பகையை மகாதேவரால் முடிவுக்கு கொண்டுவரப்படது ஆனால் சனிபகவான் சூரியதேவரை தந்தையாக ஏற்றுகொண்டாலும் சூரியதேவர் சனியை தற்போது வரை மகனாக ஏற்றுக்கொள்ளவில்லை இதன் விளைவாக விரக்தி மற்றும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த சனிபகவான் தனது குடும்பத்தை துறந்துவிட்டு தனியாகவே வாழ்ந்துவருகிறார் அவருக்கு மனைவி இருந்தாலும் எப்போதும் பற்றில்லாத ஏகபத்தினி விரதனாக வாழ்ந்து வருகிறார் கடமையே கண் கண்ட தெய்வமாக தனது கடமையை மற்றும் கண்ணும் கருத்துமாக சிவசக்தியின் அருளில் செய்துவருகிறார் இவர் மகாதேவர் மற்றும் நாராயணரின் தீவிர பக்தராவார் அவருடைய கட்டளைக்கும் மட்டுமே அடிபணிவார்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »