பிரதோச காலத்தில் ஒத வேண்டிய போற்றி திருத்தாண்டகம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

🔆 *பிரதோச காலத்தில் ஒத வேண்டிய போற்றி திருத்தாண்டகம்*🔆

🔆போற்றித் திருத்தாண்டக வரலாறு:- 👇

🙏 திருநாவுக்கரசு சுவாமிகள் கயிலையில் சிவபெருமானைக் காணும் அன்பின் மிகுதியால் உடம்பெல்லாம் தேய கயிலை மலையின் அடி சேர்ந்தார்.
பரம்பொருள் ஒரு முனிவராக தோன்றி, அருகிலுள்ள பொய்கையை காட்டி, “இப்பொய்கையில் மூழ்கி எழுந்து கயிலைக் காட்சியினை திருவையாற்றில் காண்” என அருளி மறைந்தார்.

🙏நாவரசர் பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுந்து கயிலாயக் காட்சியை கண்டு தொழுது பாடி அருளிய அற்புதமான பதிகமாகும்.

🙏 *இதைப் போலப் போற்றிப் பதிகங்கள் பல இருப்பினும் “அகத்தியர்” தன் தேவார திரட்டினுள் தமிழ் அர்ச்சனைக்கு இப்பதிகத்தையே தேர்ந்தெடுத்து உள்ளார் என்பது சிறப்புக்குரியதாகும்.*

🙏 *இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வருவது நல்லது. பிரதோஷ காலத்தில் இப்பதிகத்தை பாராயணம் செய்தால் பதி புண்ணியம் கிடைக்கும். மனம் அமைதிபெறும். தீவினைகள் அகலும்.*

– (அர்ச்சனைக்குரிய 108 போற்றி பாடல்கள்)
(சிவபெருமான் போற்றி – திருநாவுக்கரசர் அருளியது)

திருச்சிற்றம்பலம்

(1)வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி!
மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி!
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி!
ஓவாத சத்தத்து ஒளியே போற்றி! –
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி!
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

(2)பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி!
பிறவி அறுக்கும் பிரான் போற்றி!
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி!
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி!
போகாதே என் சிந்தை புகுந்தாய் போற்றி!
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

(3)மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி!
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி!
உருவாகி என்னை படைத்தாய் போற்றி!
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி!
திருவாகி நின்ற திறமே போற்றி!
தேசம் பரவப் படுவாய் போற்றி!
கருவாகி ஓடும் முகிலே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

(4)வானத்தார் போற்றும் மருந்தே போற்றி!
வந்து எந்தன் சிந்தை புகுந்தாய் போற்றி!
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி!
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி!
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி!
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி!
கானத்தீயாடல் உகந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

(5)ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி!
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி!
நீராவி யான நிழலே போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி!
காராகி நின்ற முகிலே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

(6)சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி!
தேவர் அறியாத தேவே போற்றி!
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி!
போகாதே என் சிந்தை புகுந்தாய் போற்றி!
பல்லுயிராய் பார் தோறும் நின்றாய் போற்றி!
பற்றி உலகை விடாதாய் போற்றி!
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

(7)பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி!
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி!
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி!
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி!
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி!
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

(8)இமையாது உயிராது இருந்தாய் போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி!
உமைபாகன் ஆகத்து அணைத்தாய் போற்றி!
ஊழி ஏழான ஒருவ போற்றி!
அமையா அருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி!
ஆதி புராணணாய் நின்றாய் போற்றி!
கமையாகி நின்ற கனலே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

(9)மூவாய் பிறவாய் இறவாய் போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி!
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி!
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி!
அல்லல் நலிய அலந்தேன் போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!

(10)நெடிய விசும்பொடு கண்ணே போற்றி!
நீள அகலம் உடையாய் போற்றி!
அடியும் முடியும் இகலிப் போற்றி!
அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி!
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலாய் என் சிந்தை கொண்டாய் போற்றி!
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!

(11)உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி!
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னை போற்றி!
இறை விரலால் வைத்துக் உகந்த ஈசா போற்றி!
பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி!
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி!
கண்ணாய் உலகிற்கு நின்றாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
❦❧❦❧❦❧❦❧❦❧❦❦❧❦
꧁☬ சிவ சிவ ☬꧂*
*❀ சிவாயநம❀*

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »