அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” இந்த பழமொழியை அறியாதவர் சொல்லாதவர் பெரும்பாலும் இருக்க முடியாது.

காரணம் இதன் தனித்துவம் அப்படி.எல்லா செயல்களிலும் எல்லோரும் சொல்லும்படியாய் இருக்கும்..

சாப்பிடும் உணவாக, பழமாக, மேலும் நட்பாக, எதிரியாக,கோபமாக ,சொல்லாக இருந்தாலும் தொழிலாக ,பயணமாக ,தூக்கமாக, ஏக்கமாக இப்படியே நிறையவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

என்ன இருந்தாலும் தமிழ்ப் பழமொழியை நமது சொல்லாடல் சிறப்பாக சொல்லவே இப்படி பழமொழிகள் மூலம் நமது முன்னோர்கள் சுருங்க சொல்லி விளங்க வைத்தார்கள்.

ஆயிரம் அர்த்தங்களை இரண்டே வரிகளில் ரத்தினச் சுருக்கமாக சொல்லிய நமது வள்ளுவர் கூட இதுபற்றி சொல்லி இருக்கிறார்.

நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது என்பது உண்மைதான்.

அதற்காக எப்போதும் எல்லா உணவு வகைகளையும் பிடிபிடியென்று சாப்பிட்டு விட்டால் செரிமானம் செய்ய நேரமும் காலமும் இருக்காது

அதனால்தான் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவயங்களைப் பாதிக்கிறது என்பது எவ்வளவு உண்மை. பணம் பணம் பணம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் முடிவு என்பது நமது எண்ணத்தைப் பொறுத்தது..

அதுபோல்தான் அளவுக்கு அதிகமாக அது வைக்கோல் புல் ஆனாலும்,வேறு எதுவாக இருந்தாலும் வண்டியில் ஏற்றினால் வண்டி குடை சாயும்.. எதுவும் அளவோடு இருந்தால் எந்த தொல்லையும் இல்லை.

தேவையென்று கடுமையாக உழைத்து சேர்த்தாலும் அதை உடனே பயன்படுத்தா விட்டால் உங்களின் உழைப்பு வீணாகி விடும்.

ஆனால் பணம் மட்டும் பத்திரமாக இருக்கும்.அதைக் காப்பாற்ற பெரும் பாடுபட வேண்டும் சேமிப்பைத் தாண்டி பணம் சேர்த்தால் அதுவே கவலையும் மனக் குழப்பத்தையும் சேர்த்து விடும்.

சொல்லுமே அளவாக இருக்க வேண்டும்.அது அடுத்தவரின் மனத்தைக் காயப்படுத்தும்படியோ . ஏளனப்படுத்தியோ, அவதூறாகவோ, சொல்லக் கூடாது.

வயதுக்கு மீறியும் பேசக்கூடாது.தகுதியறிந்து பேசுதல் நலம்.பெரியோர்களிடம் பேசும்போது அடக்கத்துடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

இல்லையெனில் அவர்தம் பெற்றோர்கள் சரியாக வளர்க்க வில்லை என்ற தவறான எண்ணம் வரும்..

ஆம்.,நண்பர்களே..

உணவாகினும், பணமாகினும், பிள்ளைகளாகினும், செல்வங்களும் அளவோடு இருந்தால் வாழ்க்கைக்கு நிம்மதி..

அளவுக்கு மீறினால் அதைக் காக்கவே நேரம் சரியாகி விடும் உறக்கம் கவலை நோய்கள் வந்து சேரும்

இறுதி நாட்களில் நிம்மதியில்லா நிலை ஏற்படும்.

எனவே அளவோடு வைத்து இருங்கள்
ஆனந்தமாய் மகிழுங்கள்.💐💐💐💐💐

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »