*சரஸ்வதி* No ratings yet.


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சரஸ்வதி வணங்கும் முக்கியமான பெண் கடவுள்களில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாக கருதப்படுகிறாள். சரஸ்வதி கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதப்படுகிறார். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்புப்படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் தாமரையில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் ஏடும், இருக்க, முன் கைகள் இரண்டிலும் வீணையை வைத்து மீட்டுபவளாகச் சரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏடு அறிவையும், வீணை கலைகளையும் குறிக்கிறது.

கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு அட்சமாலை என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள். கலைமகளின் வாகனமாக அன்னப்பறவை உள்ளது.

Please rate this

About the author

JOIN THE DISCUSSION