பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதமாக தெய்வங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நம்முடைய மனமானது மூன்று விதமான நிலைகளில் செயல்படுகிறது. இம்மூன்று நிலைகளையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதமாக தெய்வங்களாக நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர்.

1.#பிரம்மா:

இது கட்டுபாடற்ற மனநிலையை(Uncontrolled Mind) குறிக்கும்.எப்பொழுதும் சதா சிந்தித்து கொண்டே இருக்கும். இதனால் அறிவு பெருகி கொண்டே இருப்பதனால் “சரஸ்வதி”யை பிரம்மாவின் மனைவியாகவும் கல்விக்கான கடவுளாகவும் உருவகபடுத்தியுள்ளனர். பிரம்மாவின் வாகனம் அன்னபட்சி. அன்னபட்சி என்பது ஒர் கற்பனை படைப்பு. இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்வதுதான் சாதாரண மனிதர்களின் நிலை. எனவே தான் பிரம்மாவிற்கு கோவில் கிடையாது.

2.#விஷ்ணு :

இது ஒருமுகப்பட்ட(concentrated Mind) மனநிலையை குறிக்கும். இந்த மனநிலையில் நாம் செயல்களை செய்யும் பொழுது பெயர், புகழ், சொத்துக்கள் அதிகமாக சேரும். அதனால் தான் செல்வத்தின் அதிபதியான ஸ்ரீதேவி, பூதேவியை விஷ்ணுவின் மனைவியாக குறிப்பிடுகின்றனர். அதுபோல விஷ்ணுவின் வாகனமாக கருடனை குறிக்கின்றனர். கருடன் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பூமியில் உள்ள சிறு பூச்சிகளை கூட கொத்தி சென்று விடும். இந்த நிலையை அடைய வேண்டுமானால் ஏதாவது ஒர் குறிப்பிட்ட புள்ளியில் மனதை வைத்து பயிற்சி செய்ய வேண்டும்.

3.#சிவன் :

இது மனமற்ற(Destroyed Mind) நிலையை குறிக்கும். இத்தகைய நிலையில் மகா மாயசக்திகள் உங்கள் வசப்படும். அதனால் தான் ஆதிபராசக்தியை சிவனின் மனைவியாக உருவகப்படுத்தி உள்ளனர். அதுபோல் காளைமாடு சிவனின் வாகனமாக கூறுகின்றனர். காளை மாட்டின் இயல்பு என்னவென்றால் அதை வண்டியில் பூட்டினாலும் சரி, செக்கில் மாட்டினாலும் சரி அதை இழுத்து சென்று கொண்டே இருக்கும். எந்த வித பலனையும் எதிர்பார்க்காது. அது போல் நீங்கள் எச் செயல் செய்தாலும் எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்து வருவீர்களானால் சிவனாகவே மாறி ஆனந்தமாக வாழ்ந்திடுவீர்!

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »