அழகான வரிகள் பத்து


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

1} அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
*சாதாரண மனிதர்கள்* 🏹

2} பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்* 🏹

3} நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..
நாம் *அற்புதமானவர்கள்* 🏹

4} நேசிப்போரின் பார்வையில்..
நாம் *தனிச் சிறப்பானவர்கள்* 🏹

5} காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் *கெட்டவர்கள்* 🏹

7} சுயநலவாதிகளின் பார்வையில் நாம்…
*ஒழிக்கப்பட வேண்டியவர்கள்* 🏹

8} சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் *ஏமாளிகள்* 🏹

9} எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் *குழப்பவாதிகள்* 🏹

10} கோழைகளின் பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்* 🏹

 *நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்*
*ஒரு தனியான பார்வை உண்டு.*

🕊 ஆதலால் –
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்* 🏹

🥁 மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்……
*நீங்கள் நீங்களாகவே இருங்கள்*

🥁 *மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு…*

🥁 இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*

*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்…!*

*எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் சொத்தாக இருக்கட்டும்* 👍

🎻 *வாழ்வோம்.. பிறரையும் வாழ வைப்போம்.

*நீ . . .நீயாக இரு !*
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
*நீ . . .நீயாக இரு !*

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாவம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

அடுத்தவனுக்காக மாறி உனக்காக உள்ளோரை இழக்காதே ! ! !
*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீயாகவே இரு !*

*வாழ்க வையகம்*
*வாழ்க வளமுடன்*

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »