*கடவுளின் அவதாரங்கள் ஒரு பார்வை*


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

1. *முருகன் – வைகாசி விசாகம்*

2. *ஐயப்பன் – பங்குனி உத்திரம்*

3. *ராமர் – புனர்பூசம்*

4. *கிருஷ்ணன் – ரோகிணி*

5. *ஆண்டாள் – ஆடிப்பூரம்*

6. *அம்பிகை – ஆடிப்பூரம்*

7. *சிவன் – திருவாதிரை*

8. *விநாயகர் – ஆவணி விசாகம்*

9. *பார்வதி – ஆடிப்பூரம்*

10. *அனுமன் – மார்கழி அமாவாசை*

11. *நந்தி – பங்குனி திருவாதிரை*

12. *திருமால் – திருவோணம்*

13. *பரதன் – பூசம்*

14. *லக்குமணன் – ஆயில்யம்*

15. *சத்ருகன் – மகம்*

16. *நரசிம்மமூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர் – பிரதோச நேரம்*

17. *வீரபத்திரர் – மாசி மாதம் பூச நட்சத்திரம்*

18. *வாமனர் – ஆவணி திருவோணம்*

19. *கருடன் – ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம்*

இதுவே கடவுள்களின் அவதாரம் செய்தது ஆகும்

*33 கோடி தேவர்கள் யார் என்று பார்ப்போம்*

1. ஆதித்தர் – 12 கோடி பேர்

2. உருத்திரர் – 11 கோடி பேர்

3.அஸ்வினி – 2 கோடி பேர்

4. பசுக்கள் – 8 கோடி பேர்

முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தட்டும் என்று சொல்வார்கள்

பூஜை என்றால் என்ன? பற்றிப் பார்ப்போம்

ஆத்ம சாதகன் அடைந்துவரும் மனபரிபாகத்தின் புறச்செயல் ஆகும் எல்லா கிரியங்களை நிறைவுபடுத்துவது ஆகும் ஆன்ம ஞானத்தை உண்டு பண்ணுவது ஆகும் இது பஞ்சபூதவகையை சேர்ந்தது ஆகும்

*ஆறு கால பூஜை பற்றிப் பார்ப்போம்*

1. உஷத்காலம் – காலை 6 மணி

2. காலசந்தி – காலை 8 மணி

3. உச்சி காலம் -பகல் 12 மணி

4. பிரதோசம் – மாலை 6 மணி

5. சாயரட்சை – இரவு 8 மணி

6. அர்த்தசாமம் – நடுஜாமம் 10.30 to 11.30 வரை

*தீப ஆராதனை ( கிரியை) பற்றிப் பார்ப்போம்*

1. கற்பூரம் – இறைவனோடு ( சிவனோடு) ஜீவன் ( ஆன்மா ( அ) உயிர்) இரண்டறக் கலக்கும் பக்குவநிலை உணர்தல் ஆகும் ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது போல, சிவத்திலே ஜீவன் கரைந்து இரண்டற்ற தன்மை உண்டாக்குவது ஆகும் அத்தகைய நிலையை நாம் நமக்குள் அகக்கண்ணால் அடைய வேண்டி கற்பூர ஒளியை கையில் ஒற்றி கண்களில் வைத்துக்கொள்வது ஆகும் நமக்கு அஞ்ஞானத்தை ( அறியாமையை, இருளை) போக்கி மெய்ஞானத்தை ( ஞானஅறிவை, ஒளியை) அருளுவது ஆகும்

2. தேங்காய் – ஆன்மாவின் ( உயிரின் ) மும்மலத்தை ( ஆணவம், கன்மம், மாயை, ) நீக்கி பேரின்பம் பெறவேண்டும் என உணர்த்துதல் ஆகும் மேல்மட்டை – மாயா மலம், உரித்தெடுக்கும் நார் – கன்ம மலம், உள்ளே ஓடு – ஆணவ மலம், வெள்ளைப்பருப்பு – பேரின்பம் ( வீடுபேறு, முக்திபேறு ) ஆன்மா நீர் – ஆண்டவன் திருவருள் ஆகும்

பழம் – சாதகனின்( அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டு மெய்ஞானத்தை அடைந்தவன்) நல்வினை பலன்களை குறிக்கும்

விபூதி ( திருநீறு) – பசு சாணத்தை சாம்பலாக்கி செய்யப்படுவது ஆகும் உடல் சாம்பல் ( அ) மண் ஆகலாம் என்ற தத்துவத்தை குறிப்பது ஆகும் திருநீறு உடலில் உள்ள அசுத்தம் அகற்றி நோய் கிருமிகளை போக்கி பிணி அகற்றும் மருந்து ஆகும் பதி,பசு,பாசம், என்ற மூன்றாக கோடுகளை படித்த வண்ணம் சைவமும், நின்ற வண்ணம் வைணவமும் இடும் உடம்பில் திருநீறு இடும் இடங்கள் 16 ஆகும் திருநீறை பேணி அணிபவர்களுக்கு எல்லா செல்வங்களையும் மேலும் எல்லா நலன்களையும் தர வல்லது திருநீறு ஆகும்

குங்குமம் – தேவியின் அருளையும், நிறத்தையும் குறிக்கும் நெற்றி புருவத்தின் மத்தியில் வைப்பார்கள் குங்குமம் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி இரத்தக்கொதிப்பு, இரத்த அழுத்தம் குறைவு, நினைவாற்றல் அதிகரிக்கும், வெப்பத்தைக் குறைக்கும் தன்மை குங்குமத்திற்கு உள்ளது

*கோவிலில் வெள்ளை, சிவப்பு, கோடு இருப்பது எதற்கு?*

வெள்ளைக்கோடு ( சுக்கிலம்) சிவமயம், சிவப்புகோடு ( சுரோணிதம்) சக்தியை குறிப்பது இரண்டும் சேர்ந்து உயிரம்சம் இரண்டும் சேர்வதால் தான் உடலும் அதனை தாங்கி இயங்கும் உயிரும் உண்டாகிறது ஆகும்

*திருக்கோயில் செல்வது யான், எனது, என்ற செருக்கு போவதற்காகத்தான்*

*மேலும் வாழும்தன்மை பெறுவதற்காகத்தான் இந்த கோவில் வழிபாடுகள் எல்லாம் நம்மை செம்மையாக்கி நல் வழி படுத்துவது ஆகும்.*

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »