கோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா? அறிவியல் விளக்கத்தையும் தெரிஞ்சுக்கோங்க!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கோவிலில் மணி
ஏதோ கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி, நம்முடைய கஷ்டங்களைப் புலம்பிவிட்டு வருகிறோம் என்று கோயிலுக்குச் செல்லாமல், கோயிலின் இறைவழிப்பாட்டின் பின் உள்ள அறிவியல் அற்புதங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

🔷🔹🔶🔸🔆💖🔆🔸🔶🔹🔷

கோயிலின் இறை வழிப்பாட்டில் ஒவ்வொரு செயலுக்கும் அறிவியல் ரீதியிலான காரணங்கள் உள்ளன. இதற்கு மிக சிறந்த உதாரணம் நாம் கோவிலில் வழிபாட்டின் போது அடிக்கும் மணி.
கோவில் மணிக்கு பின் என்ன அறிவியல் ஒளிந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

🔥💥🌟💫🔔💫🌟💥🔥

கோவில் மணிகள் சாதாரண உலோகத்தினால் செய்யப்படுவதல்ல. கேட்மியம் (தகர உலோக வகை),
ஜிங்க், ஈயம், தாமிரம், நிக்கல், க்ரோமியும், மற்றும் மாங்கனீசு போன்ற பல உலோகத்தின் கலவையால் தான் கோயிலில் ஒலி எழுப்பும் மணி செய்யப்படுவது.

🦚🌸🦚🌸🦚🌸🦚🌸🦚🌸🦚

கோவில் மணியை உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகத்தின் விகிதத்திற்கு பின்னணியிலும் அறிவியல் அற்புதங்கள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு முறை மணி அடிக்கப்படும் போதும், ஒவ்வொரு உலோகத்தில் இருந்து தனித்துவமான ஒலி ஏற்படும் வகையில் ஒவ்வொரு உலோகமும் கலக்கப்பட்டிருக்கும்.

💠💠💠💠💠

இந்த தனித்துவமான ஒலிகளால், நம் இடது மற்றும் வலது மூளையில் ஒற்றுமை உண்டாக்கும். அதனால் மணி ஒலிக்க தொடங்கிய அடுத்த நொடியிலேயே கூர்மையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்க கூடிய சத்தம் எழும்.

🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃

இந்த சத்தம் 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியோசையில் இருந்து வரும் எதிரொலி, நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தொடும்.

🔔🌀🔔🌺🐚🌺🔔🌀🔔

அதனால், மூளையின் வாங்குந்தன்மையும், உணர்வு திறனும் தீவிரமடையும். அதனால் தான் கருவறைக்கு செல்லும் முன் மணியை அடித்துவிட்டு செல்கிறோம்.

🔅🔹🔅🔹🔅🔹🔅🔹🔅🔹🔅

அடுத்த முறை கோயிலுக்குச் செல்லும் போது மணியோசையைக் கவனித்து இறையின் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்!

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »